Monday, 25 December 2023

உண்மையான கிறிஸ்துமஸ்

உண்மையான கிறிஸ்துமஸ்

(உலகில் உள்ள அனைத்து மக்களுக்கும் மிகுந்த மகிழ்ச்சியை தரும் நற்செய்தி)

 

கிறிஸ்துமஸ் - இவை அனைத்தும் நம் நினைவுக்கு வருகின்றன


ü  சாண்டா கிளாஸ்

ü  கேக்

ü  நட்சத்திரங்கள்

ü  கிறிஸ்துமஸ் மரம்

ü  பெல்

ü  விளக்குகள்

ü  பட்டாசு

ü  புதிய ஆடைகள்

ü  பரிசுகள


உண்மையான கிறிஸ்துமஸ் என்பது நாம் நினைப்பதை விட மேலானது

வேதாகமத்தில் தேதி சரியாகப் பதிவு செய்யப்படவில்லை என்றாலும் இயேசு கிறிஸ்து முன்பே குறிப்பிடப்பட்டபடி பிறந்தார் என்பது உண்மை, வரலாறு கூட அதை உறுதிப்படுத்துகிறது.

கி.பி 4 ஆம் நூற்றாண்டில் இருந்துதான் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் சாண்டா கிளாஸ் இடம்பெற்றார். செயின்ட் நிக்கோலஸ் (சாண்டா கிளாஸ் என்று அழைக்கப்படுபவர்) ஏழை மக்களுக்குக் கொடுப்பதிலும் குழந்தைகளைப் பாதுகாப்பதிலும் பெயர் பெற்றவர்.

கிறிஸ்மஸ் மரங்கள் அந்தக் காலத்தில் பிற பண்டிகைகளின் பொழுது அலங்காரத்திற்கு பாரம்பரியமாகப் பயன்படுத்தப்பட்டவையாகும்.

நட்சத்திரங்களும் பரிசுகளும் வெறும் அடையாளங்கள். நட்சத்திரங்கள் கிழக்கிலிருந்த ஞானிகளை வழிநடத்தியது மற்றும் அவர்களால் மூன்று பரிசுகள் வழங்கப்பட்டன, ஞானிகளின் செயல் சிந்தனைக்குரியதாக இருக்க வேண்டும், அவர்கள் மிகுந்த அறிவு மற்றும் ஞானம் பெற்றிருந்த போதிலும், பரிசுகளை வழங்கவும் இயேசு கிறிஸ்துவைப் பார்க்கவும் வந்தனர்.

படைப்பு

மிகவும் முறையான மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட ஒரு படைப்பு இருக்கும் போது, அதன் பின்னால் ஒரு படைப்பாளியும் வடிவமைப்பும் நிச்சயம் ருக்கும். இது மறுக்க முடியாத உலக தர்க்கம்.

ஆதியிலே, "தேவன் வானத்தையும் பூமியையும் படைத்தார்". கடவுள் எல்லையற்றவர், விவரிக்க முடியாதவர், நம் கற்பனைக்கு அப்பாற்பட்டவர்.

கடவுள் எல்லாவற்றையும் அழகாகவும் ஒரு நோக்கத்திற்காகவும் படைத்தார். அவருடன் தொடர்பு கொள்ள மனிதனைத் தன் சாயலில் (அனைத்து உருவமில்லாத குணநலங்களுடனும்) படைத்தார், மேலும் மனிதன் ஒரு இயந்திரம் போலச் செயல்படுவதை கடவுள் விரும்பவில்லை.

வீழ்ச்சி

'சுவிருப்பம்' என்பது மற்ற குணநலங்களுடன் கடவுள் மனிதனுக்கு வழங்கிய பண்புகளில் ஒன்றாகும். மனிதன் தன்னைச் சுற்றியுள்ள விருப்பங்களிலிருந்து தேர்வு செய்யலாம். மனிதன் தெளிவான இருதயம் மற்றும் சிந்தையால் தம்முடன் அன்புக்கூர்ந்து உறவாட வேண்டும் என்று கடவுள் விரும்புகிறார்.

எல்லாவற்றிற்குமான தீர்வு எல்லாவற்றின் மூலத்தில் உள்ளது என்பதை மனிதன் மறந்துவிட்டான். மனிதன் கடவுளுக்குக் கீழ்ப்படியவில்லை, தானே தனது வழியை அமைத்துக்கொள்ள விரும்பினான்.

கீழ்ப்படியாமை கடவுளிடமிருந்து மனிதனைப் பிரித்தது, மேலும் மனிதன் பல விஷயங்களைச் செய்தான், அது அவனுக்கு உண்மையற்றதும் சரியாக இல்லாததுமான பல்வேறு கோட்பாடுகளை உருவாக்குவதற்கு தவறான அதீத நம்பிக்கையை அளித்தது.

மீட்புக்கான பணிகள்

மனித குலத்தின் அனைத்து தோல்விகளிலிருந்தும் மனிதர்களாகிய நமக்கு ஒரு தீர்வும் இரட்சிப்பும் அவசியம்.

ஆனால் கடவுள் எப்போதும் நீதியுள்ளவர், அவர் அனைவரையும் நேசிப்பவராகவும், சர்வ வல்லமையுள்ளவராகவும் இருக்கிறார். எனவே, கடவுள் தனது நித்திய நோக்கத்தினால் கன்னி மரியாள் மூலம் இயேசு கிறிஸ்துவை பரிசுத்த ஆவியின் வல்லமையினால் அனுப்பினார், அவர் முழு தெய்வீகத்தன்மையும் முழு மனிதத்தன்மையும் கொண்டவராக அனைத்து மனிதகுலத்திற்கும் (அனைவருக்காகவும் ரே முறை) பலியானார்.

இயேசு கிறிஸ்துவை பற்றி முன்பே அறிவிக்கப்பட்ட பல தீர்க்கதரிசனங்கள் இருந்தன. உலக தரநிலைகள் மற்றும் கணக்கீடுகள் அடிப்படையில் தீர்க்கதரிசனங்கள் நிறைவேற்றப்படுவதற்கான நிகழ்தகவு மிகவும் குறைவாகவே இருந்தது.

மீட்பு

கிறிஸ்து பாவமற்றவர், அவர் மனிதகுலத்திற்கு நன்மையான அனைத்தையும் செய்தார். எது சரியோ அதற்காக நிலை நின்றார். அவர் புகழ் மற்றும் சுயநலத்திற்காக ஒரு மதத்தையோ, ராஜ்யத்தையோ அல்லது வேறு எதையும் நிறுவ வரவில்லை.

எல்லா மனிதர்களும் வாழச் சரியான வழியைக் காட்டவே இயேசு வந்தார். நிகழ்காலத்திலும் எதிர்காலத்திலும் முடிந்த கடந்த காலத்திலும் கூட நடைமுறைக்கு ஏற்றதும் சாத்தியமானதுமான ஒரு அழகான, அமைதியான மற்றும் மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ எது சரியான முறை என்பதை மனிதனுக்கு அவர் கற்பித்தார்.

அவரிடம் நிறைய நற்குணங்கள் இருந்தபோதிலும், முன்பே சொல்லப்பட்டபடி, இயேசு அதிக துன்பங்களை அனுபவித்து, ஒரு பெரிய சிலுவையைச் சுமந்து, கைகளிலும் கால்களிலும் ஆணிகளால் அடிக்கப்பட்டு, தலையில் முள் கிரீடம் அணியப்பட்டு, நசுக்கும் விமர்சனங்களால் ஒடுக்கப்பட்டு மற்றும் கடை சொட்டு ரத்தம் வெளியேறும் வரை ஈட்டியால் துளைக்கப்பட்டு அனைத்து மக்களின் பாவங்களுக்காகவும் பலியானார்.

மறுசீரமைப்பு

இது அங்கு முடிவடையவில்லை, இயேசு தனது முழு தெய்வீகத்தன்மையால் மூன்றாம் நாள் மீண்டும் எழுந்து, தோல்விகளை எதிர்கொள்ள முடியாமல் வீழ்ச்சியடைவோருக்கு நம்பிக்கையாக மாறினார்.

எல்லா தவறுகளிலிருந்து தப்பிக்கவும், குற்ற உணர்வு மற்றும் அவமானத்திலிருந்து விலகி இருக்கவும் கடவுள் ஒரு வழியைக் காட்டியுள்ளார். அவர் எப்போதும் நீதியுள்ளவர், இயேசு இரண்டாவது முறை வரும்போது, அவர் ஒவ்வொரு தேசத்தையும் நியாயந்தீர்ப்பார். புதிய வானமும் பூமியும் உண்டாகும்.

ர்ப்பணிப்போடும் ழ்ந்த நம்பிக்கையோடும் யேசுவின் கையை ண்மையான ந்துதலால் ண்ணிப்பார்த்து ற்றுக்கொள்வது மனிதனுக்கும் கடவுளுக்கும் இடையே உள்ள க்கியத்தை ஒருங்கிணைத்து ழுக்கத்தோடு டச் செய்யும், அதுவே மனிதனின் எல்லா பிரச்சனைகளுக்குமான டதம்.

 

முடிவுரை        

தேவதூதன் அவர்களை நோக்கி: பயப்படாதிருங்கள்; இதோ, எல்லா ஜனத்துக்கும் மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன். - லூக்கா 2:10.

கிறிஸ்துவின் பிறப்பைப் பற்றிய முதல் செய்தி தேவதூனால் அந்நாட்டில் உள்ள எளிய மேய்ப்பர்களுக்கு அறிவிக்கப்பட்டது, அவர்களின் மதம் அல்லது பிற விவரங்கள் தெளிவாகக் குறிப்பிடப்படவில்லை. மதம், ஜாதி, இனம், தேசம், மொழி, கல்வி, பதவி போன்றவற்றில் வேறுபாடுகளும் பாகுபாடுகளும் இருந்தாலும், உலகில் உள்ள அனைத்து மக்களுக்கும் இது மிகுந்த மகிழ்ச்சியைத் தரும் செய்தி என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

"தேவன் தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்திய ஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, உலகத்தில் மிகவும் அன்புகூர்ந்தார்." - யோவான் 3:16.

TRUE CHRISTMAS

TRUE CHRISTMAS

(Good News of Great Joy for all the people in the World)

IT’S CHRISTMAS- THESE ALL COME TO OUR MIND


ü  Santa Claus

ü  Cake

ü  Stars

ü  Christmas Tree

ü  Bells

ü  Lights

ü  Crackers

ü  New Dresses

ü  Gifts


TRUE CHRISTMAS IS MORE THAN WHAT WE THINK

The Date is not actual as it is not adequately recorded in the Bible, but it is true and even history claims that Jesus Christ was born as foretold.

Santa Claus only comes into the play of Christmas during the 4th Century A.D. St. Nicolas (who is called Santa Claus) is known for his Giving to the needy people and Protection of children.

The Christmas trees are a traditional allegiance for decoration from other festivals of ages.

The Stars and the Gifts are just symbolizations. The Stars guided Wise men from the east and three Gifts were given by them, the more thoughtful thing should be the act of wise men, despite their knowledge and wisdom they came to offer gifts and see Jesus Christ.

CREATION

When there is a Creation that is very systematic and arranged, there must be a Creator and Design behind it. It is Universal Logic that is Undeniable.

In the Beginning, “God created the heavens and the Earth”. God is Infinite, Incomprehensible, and beyond our Imagination.

God had made everything beautiful and for a purpose. He made Man in His Image (all the immaterial qualities) to relate with Him and He doesn’t want him to act like a Robot.

FALL

‘Free Will’ is one of the attributes that God had offered along with other immaterial qualities. Man can choose from the options around him. God wants man to love and relate with Him through his free heart and mind.

Man forgot that the Solution for everything lies with the Source of everything. He disobeyed God and wanted to find his way by himself.

Disobedience separated Man from God and Man had made many things that gave him false overconfidence to frame various theories that were not as actual and factual as they needed to be.

PREPARATION FOR REDEMPTION

There needs to be a Solution and Salvation to all the failures of Mankind.

But God is very Righteous though He is all-loving and all-powerful. So, God by his Eternal Purpose sent Jesus Christ through the Virgin Mary by the power of the Holy Spirit, who was all human with all divinity to be a Sacrifice for all Mankind (Once for all).

There were many Prophecies that proclaimed Jesus Christ. The Probability of the fulfillment of the Prophecies was very negligible by the World Standards and Calculations.

REDEMPTION

Christ was Sinless and He had done all that is good for Mankind. He stood for what was right. He doesn’t come to establish a religion, kingdom, or anything else for fame and Selfish Gain.

Jesus came to show the right way for all Mankind to Live. He taught what is perfect for the Man to live a Lovely, Peaceful, and Joyful life that is all practical and possible in the Present and Future as well as completed Past.

Despite His Goodness, as it was pre-told Jesus became a Sacrifice by Suffering too much, Carrying a big Cross, Nails in His hands and Legs, a Crown of thorns in His head, Criticisms that Crush, & Pierce of Spear till the last surge of Blood, for Sins of all the people.

RESTORATION

It doesn’t end there, Jesus by His all divinity rose again and became a hope to those who are falling away and couldn’t face the failures.

God has shown a way to escape from all the Wrongs, to be away from Guilt and Shame. He is always righteous and when Jesus comes a second time, He will judge every nation. There will be a new Heaven and Earth.

 

Accepting, Believing, and Committing Jesus as a Savior doesn’t make a person religious but helps them to be Delivered, to live an Exemplary Life From all the Flaws and Greediness.

 

CONCLUSION:

“And the angel said unto them, Fear not: for, behold, I bring you good tidings of great joy, which shall be to all people.”-Luke 2:10

 

The foremost news about the birth of Christ was proclaimed by the angels to the simple shepherds in the country, whose religion or other details aren’t obvious. It was stated that it is the good news of great joy for all the people in the world despite the differences and discrimination in regard to religion, caste, race, nation, language, education, position, etc.

 

“For God so loved the world that He gave His only begotten Son, that whoever believes in Him should not perish, but have eternal life.” -John 3:16