Saturday, 5 December 2020

அமைதி வேளை

இந்த அழகான உலகில் ஆண்டவர் நம்மைச் சுற்றி நிறைய அற்புதமான, அர்த்தமுள்ள உறவுகளை ஏற்படுத்தியுள்ளார். எல்லா உறவுகளிலும் ஒருவருக்கொருவர் இடையே உள்ள தொடர்பு மிகவும் அவசியமாக உள்ளது. தொடர்பு சத்தங்கள், செயல்கள், இசை, எழுத்துக்கள், அடையாளங்கள், சின்னங்கள் மூலமாக வெளிபடுகிறது. கடவுள் எல்லா மனிதரையும் தம்மோடு தொடர்பு கொள்ளவும், ஒருவரோடு ஒருவர் தொடர்பு கொள்ளவுமே (ஆதியாகமம் 2:19-22) தமது சாயலாக (ஆதியாகமம் 1:27) உருவாக்கினார். அமைதி வேளை கடுவுளோடு கூட நேரம் செலவிட்டு அவரோடு அர்த்தமுள்ள தொடர்பை ஏற்படுத்த உதவுகிறது(ஏசாயா 63:7).    
அறிமுகவுரை:
அமைதி வேளை என்பது ஒவ்வொரு விசுவாசியும் கடவுளோடு செலவிடப்படும் தனிப்பட்ட நேரம் அல்லது நியமனம்(மாற்கு 1:35) ஆகும். அமைதி வேளையின் பொழுது நாம் துதிபாடல்கள் பாடலாம், ஜெபிக்கலாம், வேதாகமம் அல்லது அனுதின தியானத்தை வாசிக்கலாம், தேவனுடைய வார்த்தையைத் தியானிக்கலாம், அல்லது அமைதியாகத் தேவனை நோக்கிப் பார்த்துச் சிந்திக்கலாம். அமைதி வேளை என்பது தேவன் நாம் கீழ்ப்படியும்படி/பின்பற்றும்படி கூறுவதை கேட்பதும், நாம் அவரோடு பேசுவதும் ஆகும்.
அமைதி வேளையின் அவசியம்:
நாமெல்லோரும் வெவ்வேறு சூழ்நிலைகளில் பிறந்து, வளர்ந்துள்ளோம். நாம் தனித்துவமிக்கவர்களாக வெவ்வேறு விருப்பங்களும் ஆர்வங்களும் உள்ளவர்களாக இருப்பதற்கு நமது குடும்ப பின்னணி, நிதி பின்னணி, சமூக பின்னணி, கலாச்சார பின்னணி, கல்வி பின்னணி போன்றவை காரணங்களாக உள்ளன. நம் ஒவ்வொருவருக்குள்ளும் நிறைய முன்குறித்த கருத்துக்கள் நம்முடைய பின்னணிகளின் விளைவுகளால் ஏற்பட்டுள்ளன. அவை யதார்த்தமாகவும், மன நிறைவாகவும் எல்லா நேரங்களிலும் இருப்பதில்லை. எல்லா விளைவுகளையும், வேறுபாடுகளையும் உடைத்தெரிவதற்கு, நம் அனைவருக்கும், நம்மைப் படைத்த கடவுள் ஒருவர் தரக்கூடிய தரமான பொதுவான மதிப்பீடுகள் தேவை. ஒரு இயந்திரம் இயங்குவதை அதன் வடிவமைப்பாளர் நிர்ணயிப்பது போல. குழப்பங்கள் இல்லாமலும், பாரபட்சம் இல்லாமலும் ஒழுங்கான வாழக்கை வாழ்வதற்கு, கடுவுள் நாம் எப்படி வாழ வேண்டும் என நினைக்கிறார் என்பதை அறிவது மிகவும் அவசியமாகும் (ரோமர் 12:1,2). நாம் தேவனுடைய வார்த்தையின்படி வாழும் பொழுதுதான் தடைகள் மற்றும் துன்பமான சூழலிலும் சந்தோஷமான, சமாதானமான, திருப்தியான வாழ்வை வாழ முடியும் (பிலிப்பியர் 4:12). நாம் தேவனுடைய மேன்மையையும், இறையாண்மையையும் நினைவுக்கூர்ந்து ஜெபித்து, போற்றி அவரைச் சார்ந்திருப்பதே இந்த உலகில் உள்ள எல்லா சூழ்நிலைகளையும் சமாளிப்பதற்கும், முறியடிப்பதர்க்கும் சிறந்த வழியாகும்(யாக்கோபு 5:15,16). எல்லா பிரச்சனைகளுக்கான தீர்வுகளும், நாம் உருவாகக் காரணமானவர் இடத்திலிருந்துதான் கிடைக்கிறது(1கொரிந்தியர் 8:6). நாம் தேவனுடைய வார்த்தையைக் கேட்டு நடப்பதும், அவரிடம் பேசுவதும் உலகில் உள்ள அனைத்திலும் நன்மை தீமையைப் பகுத்தறிந்து அதை அனுபவிக்க உதவுகிறது, அது மாத்திரம் இல்லாமல் நம் வாழ்வில் தேவனுடைய நோக்கத்தை உணர்ந்து, வாழ்வில் நம்மைச் சுற்றியுள்ள அணைத்து  காரியங்களையும் சமப்படுத்த உதவுகிறது(1தீமோத்தேயு4:4, 5).
தேவனுடைய வார்த்தையைக் கேட்பது:
தேவனுடைய வார்த்தையைக் கேட்பது என்பது விசித்திரமாக இருக்க வேண்டியதில்லை, அது தேவனுடைய வார்த்தையைப் படித்து, உணர்ந்து, அதில் கூறப்பட்டுள்ள கருத்துக்களை பின்பற்றுவதே ஆகும். கடுவுள் நம்மோடு சத்தங்கள், அடையாளங்கள், சின்னங்கள், சிந்தனைகள், சூழ்நிலைகள் ஆகியவற்றின் மூலம் பேசக்கூடும், இருப்பினும் நாம் அதை வேதாகமத்தோடு ஒப்பிட்டுச் சரிபார்க்க வேண்டும். தேவன் ஒரு போதும் மாறாதவர், அவர் வேதாகமத்தின் சூழ்நிலையையும், போதனையையும் ஒரு போதும் முரண்படுத்துவதில்லை(எபிரெயர் 4:12). நாம் தேவனுடைய வார்த்தையைக் கேட்கும் சிறந்த வழி வேதாகமம் மற்றும் அதின் மதிப்பீடுகள் மூலமாகும். தேவனுடைய வார்த்தையைக் கேட்பது நமக்குத் தேவனை பற்றி அறிவதற்கும், நம்மைப் பற்றி நாமே அறிவதற்கும், நாம் எப்படி இருக்க வேண்டும் எனத் தெரிந்துக்கொள்வதற்கும், நாம் என்ன செய்ய வேண்டும் எனத் தெரிந்துக்கொள்வதர்க்கும் உதவுகிறது. நம் ஒவ்வொருவருடைய சூழ்நிலைக்கேற்ப தேவனுடைய வார்த்தை நமக்கு ஏற்றதாய் இருக்கிறது, நாம் தேவனுடைய வார்த்தையைக் கேட்பதை அச்சமயங்களில் அனுபவபூர்வமாகத் தெரிந்து கொள்ள முடியும். நாம் தேவனுடைய வார்த்தையைச் சரியாகக் கேட்டால் தான், அவரிடத்தில் சரியாகப் பேச முடியும் (யோவான் 4:7-26).
நாம் வேதாகமத்தின் ஒரு பகுதியை/அதிகாரத்தை/புஸ்தகத்தை படித்துத் தியானிப்பதற்கும், அதில் கூறப்பட்டுள்ள காரியங்களில் சில முக்கியமானவற்றை சிந்திப்பதற்கும் ASPECT என்ற ஒரு எளிய முறையைப் பயன்படுத்துகிறோம்
A- குறிப்பது “கடுவுளை பற்றி” (“ABOUT GOD”) (நீதிமொழிகள் 2:1-5)
S- குறிப்பது “விடவேண்டிய பாவங்கள்” (“SINS TO AVOID”) (சங்கீதம் 119:9)
P- குறிப்பது “பற்றிக்கொள்ள வேண்டிய சத்தியங்கள்” (“PROMISES TO CLAIM”) (சங்கீதம் 119:148)
E- குறிப்பது “பின்பற்ற வேண்டிய உதாரணங்கள் மற்றும் பின்பற்றக் கூடாத உதாரணங்கள்” (“EXAMPLES TO FOLLOW & EXAMPLES NOT TO FOLLOW”) (எபிரெயர் 11அதி.)
C- குறிப்பது “கீழ்படிய வேண்டிய கட்டளைகள்” (“COMMANDS TO OBEY”) (யாக்கோபு 1:22)
T- குறிப்பது “கருப்பொருள்” (“THEME”) (உதாரணத்திற்கு 1கொரிந்தியர் 13ஆம் அதிகாரம் அன்பை பற்றியது)
நாம் ஒரு பகுதி/அதிகாரம்/புஸ்தகத்தில் உள்ள கடவுளைப் பற்றிய வார்த்தைகளைக் கவனித்தால், ஜெபிக்கும்பொழுது அவரைத் துதிக்கவும், போற்றவும் முடியும். விடவேண்டிய பாவங்களைக் கவனிக்கும்பொழுது, நாம் நம்மிடத்தில் சரி செய்து கொள்ள வேண்டியவற்றை தெரிந்து கொண்டு, கடவுளின் உதவியோடு அதை முறியடிக்கலாம். நாம் பற்றிக்கொள்ள வேண்டிய சத்தியங்களை கவனிப்பதன் மூலம், வேதாகமத்தில் தேவன் கூறிய வார்த்தைகளை உரிமை பாராட்ட முடியும். நாம் பின்பற்ற வேண்டிய உதாரணங்கள், பின்பற்றக் கூடாத உதாரணங்களைக் கவனிப்பதன் மூலம், மனிதர்களின் குணங்களை உணர்ந்து, நமக்காகவும், நம்மைச் சுற்றியுள்ள மக்களுக்காகவும் நன்றி/முறையிடுதல் செய்ய முடியும். நாம் கீழ்படிய வேண்டிய கட்டளைகளைக் கவனிப்பதன் மூலம் தேவன் கொடுத்த கட்டளைகளை அவருடைய வலிமையினாலும், வழிநடுத்துதலாலும் பின்பற்ற முடியும். நாம் ஒரு பகுதி/அதிகாரம்/புஸ்தகத்தில் உள்ள கருப்பொருளைக் கவனிப்பதன் மூலம், நாம் கற்றுக்கொண்ட சில முக்கியமான காரியங்களை நினைவில் வைத்துக்கொள்ள முடியும்.
தேவனிடம் பேசுவது:
தேவனிடம் பேசுவதற்கு அசாதாரமான முயற்சி தேவையில்லை, நம்முடைய நெருங்கிய நண்பரிடமோ அல்லது தந்தையிடமோ அன்போடும், மரியாதையோடும் பேசுவது போன்று பேசலாம் (யோனா 4:1-3). நாம் தேவனோடு பாடல்கள், எழுத்துக்கள், பிரதிபலிப்பு, ஜெபம் ஆகியவற்றின் மூலம் பேச முடியும். ஜெபம் என்ற செயலில் நாம் தேவனோடு நம்முடைய சொந்த வார்த்தைகள்மூலம் பேசுகிறோம். நாம் நிறைய நேரங்களில் கடுவுள் அன்பானவர், பராமரிப்பவர் என்பதை மாத்திரம் நினைவில் வைத்து, நம்முடைய தேவைகளையும், குறைகளையும் மாத்திரம் தேவனிடம் கூறுகிறோம். நிறைய நேரங்களில் தேவன் எல்லாம் வல்லவர், எல்லாம் அறிந்தவர், எங்கும் நிறைந்தவர் என்பதை நினைவுக்கூர்ந்து அவரைப் போற்றுவதில்லை. நிறைய நேரங்களில் அவர் நம்முடைய தேவைகளைத் தருவதில் உண்மையுள்ளவர் என்பதை நினைவுக்கூர்ந்து, அவருக்கு நன்றி சொல்லுவதில்லை. மற்றும் நிறைய நேரங்களில் தேவன் நீதியுள்ளவர், மன்னிப்பவர், இரக்கமுள்ளவர் என்பதை நினைவுக்கூர்ந்து, குற்றங்களை ஒப்புக்கொள்ளுவதும் இல்லை.
நாம் ஜெபத்தின் மூலம் கடவுளோடு பேசுவதற்கும், சில முக்கியமானவற்றை மறக்காமல் இருப்பதற்கும் ACTS என்ற எளிய முறையைப் பயன்படுத்துகிறோம்
A- குறிப்பது “துதித்தல்” (“ADORATION”) (சங்கீதம் 13அதி.)
C- குறிப்பது “பாவங்களை ஒப்புக்கொள்ளுதல்” (“CONFESSION”) (2சாமுவேல் 12:13; யாத்திராகமம் 32:31,32)
T- குறிப்பது “நன்றி செலுத்துதல்” (“THANKS GIVING”) (சங்கீதம் 100:4,5)
S- குறிப்பது “வேண்டுதல்” (“SUPPLICATION”) (தானியேல் 2:18; 1இராஜாக்கள் 3:9)
நாம் தேவனுடைய வார்த்தையில் ASPECT முறைமையின் படி கற்றுக்கொண்ட காரியங்களை அவரிடம் பேசும்பொழுது பயன்படுத்தலாம். நாம் கடுவுளை பற்றிக் கற்றுக்கொண்டதை வைத்து அவரைப் போற்றலாம். நாம் தனிப்பட்டவர்களாகவும், ஒரு சமூகமாகவும் செய்த குற்றங்களை ஒப்புக்கொள்ளலாம், நாம் தேவனுடைய கட்டளைகளுக்காக நன்றி சொல்லலாம், நாம் நம்முடைய தேவைகளுக்காகவும், நம்முடைய குறைகளை முறியடிப்பதற்கும் வேண்டுதல் செய்யலாம்.
முடிவுரை:
ஒவ்வொரு மனிதனும் அவன் வாழ்வின் நோக்கங்களை அறிந்துக்கொள்ள அமைதி வேளை மிகவும் அவசியமாகும் (பிரசங்கி 12:13). எல்லா உறவுகளும் உயிரோட்டத்துடன் இருப்பதற்கு ஒழுங்கும், வழக்கமும் தேவைப்படுவது போல அமைதி வேளைக்கும் இவை தேவையாகும். சிலர் அதிகாலையில் தேவனோடு கூட நேரம் செலவளிப்பர், சிலர் தூங்கி எழுந்தவுடன் நேரம் செலவளிப்பர், சிலர் மாலையிலும், சிலர் இரவிலும் தங்களுடைய நிலைமை, வசதிக்கேற்ப கடவுளோடு நேரம் செலவளிப்பர். குறித்த நேரம் மிகவும் அவசியமானதன்று, ஆனால் தேவனுடைய வார்த்தையைக் கேட்பதும், அதின்படி நடப்பதும், அவரோடு பேசுவதுமே அவருடைய சித்தத்தின்படி நடக்க உதவும் (சங்கீதம் 119:15). நான் தேவனோடு அதிகாலையில் நேரம் செலவளிப்பதை அறிவுறுத்துகிறேன், ஏனெனில் அது சிறந்த அமைதியான நேரம், நம் சிந்தனைகளும் புதியதாக இருக்கும். அதிகாலையில் செய்வது முதற்காரியம், ஆகையால் அதிக கவனமும் செலுத்த முடியும். தேவனுடைய வார்த்தையைக் கேட்பதும், அவரிடம் பேசுவதும் சமமாக முக்கியம், அவை இரண்டும் ஒன்றை ஒன்று பூர்த்தி செய்து, நமது விசுவாசத்தை நிலைப்பெற செய்கிறது. அவை ஒரு மனிதனை முழுவதும் செயலாற்ற கூடியவனாக மாற்றுகிறது.
“தேவன் படைத்ததெல்லாம் நல்லதாயிருக்கிறது. ஸ்தோத்திரத்தோடே ஏற்றுக்கொள்ளப்படுமாகில் ஒன்றும் தள்ளபடத்தக்கதல்ல. அது தேவவசனத்தாலும் ஜெபத்தினாலும் பரிசுத்தமாக்கப்படும்.” – 1 தீமோத்தேயு 4:4,5

குறிப்பு: 
வீடியோ உள்ளடக்கத்தை இங்கே அணுகலாம் @ https://youtu.be/at_Mpj9tAbQ 

மேலும் கற்கவும் பயிற்சி செய்யவும்,
உள்ளடக்கம், மாதிரி மற்றும்  பயிற்சி தாள்களுக்கான (template) கோப்புகளை (files) இங்கே பெறலாம்@ 
https://drive.google.com/drive/folders/1SpRZuNoXQEAyHfAEOK8frskA0gGBi95I?usp=drive_link 

QUIET TIME

There are many wonderful and meaningful relationships in this beautiful world that the Lord has made. Every Relationship involves communication with each other in the form of sounds, actions, music, letters, signs, symbols, etc. God created every human being in his own image (Genesis 1:27) to relate with him and relate with one another (Genesis 2:19-22). Quiet time is meant to have a meaningful personal relationship with God (Isaiah 63:7).

INTRODUCTION:

Quiet time is the personal time or an appointment with God for every genuine Believer (Mark 1:35). During our quiet time, we may sing praise songs, pray, read Scripture or daily devotions, meditate on God's Word, or simply be still and listen. Quiet time is hearing what the Lord says us to obey/ follow and speaking to God.

NEED OF QUIET TIME:

All of us are born and brought up in different situations. We have a different family background, financial background, social background, cultural background, educational background, etc. that makes us unique in our tastes and interests. And we all have some preconceived ideas about many things around us because of the influence of our own environments which may or may not be realistic and really satisfactory. In order to break down the influences and differences, everyone needs some standard values in our lives that could be given only by God (A Superior Personality), the Creator as there is a manual for every machine from the manufacturer. In order to live an orderly life without chaos and bias, we need to really know how the Lord wants our lives to be (Romans 12:1,2). Only when we live according to the Word of God, we could find a life of Joy, Peace, and Contentment in the midst of sufferings and obstacles (Philippians 4:12). Also only when we depend on God and remember his majesty and Sovereignty by praying to him and praising him, we would be able to face and overcome the situations of the world in the best way (James 5:15,16). The solution for everything in the world lies only with the source of everything in the world (1Corinthians 8:6). Hearing from God and Speaking to God helps us to enjoy all the things of the world that the Lord has made by discerning between Right and wrong, as well as balance everything around us knowing the purpose of God in our lives (1Timothy 4:4, 5).

HEARING FROM GOD:  

Hearing from God should not sound something very odd; it’s just reading, understanding, and following the Word of God pronounced through the scriptures. Though God could speak to us through the sounds, signs, symbols, situations, thoughts, etc., we need to recheck it with the scriptures as he is unchanging and never contradicts what he has said in the scriptures through the circumstances and teachings in the bible (Hebrews 4:12). The best way to hear from the Lord is through the Scriptures and the values inscribed in it. Hearing from God helps us to know about God, to know about ourselves, to know what we are supposed to be and to know what we are supposed to do. The values are so much approachable to our lives in the appropriate situations that we can really confirm hearing from God by experiencing it. Only when we hear rightly from God, we could really speak rightly to God (John 4:7-26).

One of the simplest methods to reflect on a passage/chapter/book of the bible and hear some important aspects in it is “ASPECT method”:

A- denotes  ABOUT GOD” (Proverbs 2:1-5)

S- denotes “SINS TO AVOID” (Psalms 119:9)

P- denotes “PROMISES TO CLAIM” (Psalms 119:148)

E- denotes “EXAMPLES TO FOLLOW & EXAMPLES NOT TO FOLLOW” (Hebrews 11Ch)

C- denotes “COMMANDS TO OBEY” (James 1:22)

T- denotes “THEME” (For instance 1Corinthians 13Ch talks about Love)

By noticing the words about God in the Passage/Chapter/Book, we could praise and admire God while speaking to him. By noticing the Sins to avoid we shall know what we need to correct in our lives and ask God’s help to overcome it. By noticing the promises to claim, we shall claim the inheritance that we have in our God which he has promised through the scriptures. By noticing the Examples to follow & Examples not to follow, we shall know the nature of human beings and thank/plead God for ourselves and people around us in our lives. By noticing the commands to obey, we shall follow the commandments were given by God with his strength and guidance. By noticing the Theme of the Passage/Chapter/Book, we shall remember important things we learnt in it.

SPEAKING TO GOD:

Speaking with God doesn’t mean something that needs an extraordinary effort; it’s just simple as we talk to our beloved friend or father with love and respect (Jonah 4:1-3). We can speak to God through songs, letters, reflection, and Prayer, etc. Prayer is an action in which we simply speak to God with our own words. Many times we utter words that only state our needs as we only remember that God is loving and caring who could provide all our needs and help us in our weaknesses.  Most of the time we forget that he is omnipotent, omniscient, omnipresent, and fails to utter words to praise him. Most of the time we forget that he is faithful in providing our needs and fail to utter words to thank him. And Most of the times we forget that he is Righteous, Forgiving, concerning, and fail to utter words to confess before him.

One of the simplest methods to speak to God in Prayer without forgetting some important aspects is through “ACTS method”:

A- denotes  ADORATION” (Psalms 13Ch)

C- denotes “CONFESSION” (2Samuel 12:13; Exodus 32:31,32)

T- denotes “THANKSGIVING” (Psalms 100:4,5)

S- denotes “SUPPLICATION” (Daniel 2:18; 1kings 3:9)

All the things we heard from God through the Scripture (by ASPECT) can be spoken to God. We shall adore God for his attributes. We shall confess the sins we want to avoid as an individual and community. We shall thank God for the Commandments, Promises, and Examples he had given us. We shall supplicate him for our needs and to overcome our limitations. 

CONCLUSION:

QUIET TIME (Spending time with God) is essential for every person in his life to know the Purpose of his life (Ecclesiastes 12:13). It needs a lot of Discipline and regularity as every other relationship to exist and survive. Some people spend time with God in the early morning, some people spend time when they get up, some people spend time in the evening and some people spend time in the night based on their personal setup and convenience. The timing is not much important but hearing from God especially through the Scriptures and Speaking to God regularly in very important to be in the Will of God (Psalms 119:15). I would suggest spending time with God in the early morning which is the best time as it is quieter and our thoughts are fresh. Also, we could concentrate better in the morning as it is the first action we do in a day. Hearing from God is as much as important as Speaking to God because both compliment each other and our faith in God is strengthened. It always helps us to become a fully functional human being.

“For Everything God created is good and nothing is to be rejected if it is received with thanksgiving, because it is consecrated by the WORD OF GOD AND PRAYER. – 1Timothy 4:4,5"


Note: 

You can access video content @ https://youtu.be/HyFHmkRokK8

For further learning and practice, Check the content, sample, and template files @ https://drive.google.com/drive/folders/1ioSwVbtDo2tHdrpBsNbna1FbOuzTqXXj?usp=sharing

Sunday, 29 November 2020

மாதிரி தனிநபர் வேத ஆராய்ச்சி

மத்தேயு 9:9-13

கவனித்தறிதல்(Observation)

பொருளறிதல்(Interpretation)

செயல்படுத்துதல்(Application)

1.    இலக்கிய வடிவம்:(Literary form):

நற்செய்தியிலுள்ள சம்பவங்கள்

2.    திரும்ப திரும்ப வரும் வார்த்தைகள்(Repeated Words):

ஆயக்காரர், பாவிகள், இயேசு, பந்தி, பின் சென்று,

3.    இடத்தை குறிக்கும் வார்த்தைகள்(Locative Words):

ஆயத்துறை(v9), வீடு(v10)

4.    நேரத்தை குறிக்கும் வார்த்தைகள்(Timing Words):

புறப்பட்டு போகையில்(v9), போஜனபந்தி இருக்கையில்(v10)

5.    இணைக்கும் வார்த்தைகள் (Connective words):

பின்பு(v10), உம்,

6.    தெரியாத வார்த்தைகள்(Unknown words):

ஆயத்துறை(v9), போஜனம்(v10), பிணியாளி(v12)

7.    வேற்றுமை ஒற்றுமைகளை ஒப்பிடுதல்(Contrast):

பிணியாளி * சுகமுள்ளவன்(v12)

நீதிமான்* பாவிகள்(v13)

8.    சொல்லணிக்கலை(Rhetorical Question):

உங்கள் போதகர் ஆயக்காரரோடும் பாவிகளோடும் போஜனம் பண்ணுகிதென்ன? (v11)

 

7FFQ’s

1.    என்ன? (What)

இயேசு ஆயக்காரனாகிய மத்தேயுவை அழைத்தல்(v9)

2.    எங்கே? (Where)

மத்தேயுவின் வீட்டில்(v10)

3.    எப்பொழுது? (When)

மத்தேயுவின் வீட்டில் போஜனம் பண்ணும் பொழுது(v10)

4.    யார்? (Who)

இயேசு, பரிசேயர், சீஷர்கள், மத்தேயு, ஆயக்கரர்கள், பாவிகள்

5.    ஏன்? (Why)

பாவிகளை இரட்சிப்பதற்காகவே கிறிஸ்து இயேசு இவ்வுலகத்திற்க்கு வந்தார் என்பதை வெளிப்படுத்த.(v13)

6.    எப்படி? (How)

மத்தேயுவிடம் என்னை பின்பற்றி வா என்று கூறியதன் மூலம்.(v9)

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

V9) இயேசு அவர் வாழ்ந்த ஊராகிய காப்பர்ணகூமிலிருந்து(அவ்விடம்) புறப்பட்டு போகையில்(Refer மத்தேயு 4:13) {சூழ்நிலையையும், வரலாற்று பின்னணியையும் வைத்து பொருள் அறிந்துள்ளோம்}

ஆயத்துறை- வரி வசூலிக்கும் துறை(வார்த்தையின் பொருளை வைத்து பொருள் அறிந்துள்ளோம்)

V10) இயேசு ஆயத்துறையில் அமர்ந்திருந்த மத்தேயுவை அழைத்தபொழுது, அங்கே இருந்த ஆயக்காரரும், பாவிகளும் அதை கண்டு இருக்கலாம், அதனால் அவர்களும் இயேசுவையும் மத்தேயுவையும் பின்பற்றி சென்று அவர்களோடு போஜனம்பண்ணினார்கள். {சூழ்நிலையை வைத்து பொருள் அறிந்துள்ளோம்}

V11) பரிசேயர்- தேவ ஆலயத்தில் முதன்மை இடம் வகிப்பவர்கள். வேதாகமத்தை அறிந்தவர்கள், கட்டளைகளை பின்பற்றுபவர்கள். (வார்த்தையின் பொருளை வைத்து பொருள் அறிந்துள்ளோம்)

பரிசேயர் தங்களை நீதிமான்களாக கருதினதினாலும், பாவிகளோடும் ஆயக்காரரோடும் சேராததினாலும், யூதர்கள் அவர்களை சமமாக எண்ணாததினாலும், பரிசேயர் சீஷர்களிடம் ஏன் இயேசு பாவிகளோடும் ஆயக்காரரோடும் போஜனம் பண்ணுகிறார் என்று கேட்டார்கள். ) {சூழ்நிலையையும், வரலாற்று பின்னணியையும் வைத்து பொருள் அறிந்துள்ளோம்}

V12,13) இயேசு கிறிஸ்து நீதிமான்களையல்ல பாவிகளையே மனந்திரும்புவதர்க்கு அழைக்க வந்தார். அதனால் எப்படி ஒரு பிணியாளிக்கு வைத்தியன் தேவையோ, சுகமுள்ளவனுக்கு வைத்தியன் தேவையில்லையோ, பாவிகளுக்கு தான் தாம் தேவை என்பதை பரிசேயருக்கு இந்த உதாரணம் மூலம் எடுத்துரைத்தார். {சூழ்நிலையை வைத்து பொருள் அறிந்துள்ளோம்}

பலியை அல்ல இரக்கத்தையே விரும்புகிறேன்- பரிசேயர் கட்டளைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்ததால், பலிகளை தவறாமல் செலுத்துவார்கள். ஆனால் மனிதரிடம் முக்கியமாக புறஜாதிகளிடம் அன்பு செலுத்தாமல் அவர்களை தாழ்மையாக கருதினார்கள். அவர்களிடம் கரிசனையும் இல்லாமல் இருந்தது. அதனால் இயேசு கிறிஸ்து தாம் பலியை அல்ல இரக்கத்தையே தாம் விரும்புவதாக உரைத்தார்.

{சூழ்நிலையையும், சமூக பின்னணியையும் வைத்து பொருள் அறிந்துள்ளோம்}

 

1.    இயேசு கிறிஸ்து என்னை அழைக்கும் பொழுது அவருக்கு கீழ்படிந்து அவரை பின்பற்ற வேண்டும் (V10)

2.    நான் பரிசேயரை போல் இராமல்இயேசுவை போல்  பாவிகளையும், ஆயக்காரையும் சமமாக எண்ணி, அவர்களோடு நல்ல உறவு கொள்ள வேண்டும்.(V11)

3.    பாவிகளுக்கு தான் நீதிமான்களை காட்டிலும் மனந்திரும்புதல் அவசியம் என்பதை நான் உணர்ந்து அவர்களுக்கு அதிக நேரத்தையும், கவனத்தையும் கொடுக்க வேண்டும் (V13)

4.    நான் நீதிகளையும் சட்டங்களையும் காட்டிலும் மற்றவரை நேசிப்பதையும், இறக்கத்தையுமே முதன்மையாக கருதுவேன். (V13)

 

 

 

Sample Personal Bible Study (PBS)

 

LUKE 5:12-16

Observation

Interpretation

Application

Literature: Narrative,

Grammar:

Tense: Past tense

Conditional Clause: If (v12)

Verbs: Willing, Cleansing, Spread, Withdrew

Theme: Healing of Man with Leprosy

Metonymy: ‘Moses Wrote’ is mentioned as ‘Moses Commanded’

Contrast: Covered with leprosy* Clean(v12)

Healed of*Sickness(v15)

Came*Withdrew(v15, 16)

Crowds*lonely(v15,16)

Repeated Words: Willing, Clean, Jesus, Man

Location Words: One of the towns, Lonely places

7FFQ’s

What- A man with Leprosy healed

Where-  One of the Towns

When- While Jesus was in one of the towns

Who- Jesus, Man with Leprosy, Crowd

Why- Leper Man’s faith and Jesus’s Compassion

How- By reaching out his hand, touching him and by willing to Clean him.

So What- The News spread all the more and the Crowd of people came to hear and be healed. Jesus often withdrew to lonely places and prayed.

V12) One of the towns refers to an outer and isolated place in one of the towns of Galilee probably (By Applying the principle of context, Geographical, and Social Background). The Leper man already knew and had faith that Jesus could heal his disease but he wants it only if Jesus wills it.

A word study:

Leprosy, Greek-le/pra(Lepra) which means not only leprosy but different skin diseases. (By Applying the principle of the meaning)

V13) The Lepers were considered unclean to be touched according to law. But Jesus had compassion on him; he touched him and cleansed him. Jesus’s Compassion super passed the ceremonies. (By Applying the Principle of context and Social Background)

V14) Jesus was particular about his vision and Mission, so he told him not to tell anyone. Also, Jesus doesn’t come to break the law but to fulfill it that’s why he ordered the Man to Show to priest and offer the Sacrifice that Moses had written in the laws of the Old Testament so that he can be free from his uncleanliness and be a testimony to them. (By Applying the principle of Purpose of Bible and Historical Background)

V15) The Leper had spread the news disobeying Jesus. (Mark 1:40-45) and as a result, a large number of the crowd wanted him for their comfort. (By Applying the principle of context)

V16) Jesus didn’t come only to heal and comfort people but also to fulfill his Father’s purpose. He went out to a lonely place and prayed very often to be thoughtful and reside in it.

V12) I will ask my needs/desires in according to the will of God.

 

 

 

 

 

 

V13) Compassion towards the weak and needy people should always overrule my cultural or social values.

 

V14) I should follow the laws and obey it always as It is for my good as well as an Other Persons Good. 

 

V15) It’s always necessary that I should obey God to the Fullest even surpassing it brings positive results. As it may hinder God’s broader plan sometimes.

V16) Spend time with God personally often to reside in his plan for me.