மத்தேயு 9:9-13
|
கவனித்தறிதல்(Observation) |
பொருளறிதல்(Interpretation) |
செயல்படுத்துதல்(Application) |
|
1. இலக்கிய வடிவம்:(Literary form): நற்செய்தியிலுள்ள சம்பவங்கள் 2. திரும்ப திரும்ப வரும் வார்த்தைகள்(Repeated
Words): ஆயக்காரர், பாவிகள், இயேசு, பந்தி,
பின் சென்று, 3. இடத்தை குறிக்கும் வார்த்தைகள்(Locative Words): ஆயத்துறை(v9), வீடு(v10) 4. நேரத்தை குறிக்கும் வார்த்தைகள்(Timing Words): புறப்பட்டு போகையில்(v9), போஜனபந்தி
இருக்கையில்(v10) 5.
இணைக்கும் வார்த்தைகள் (Connective words): பின்பு(v10), உம், 6. தெரியாத வார்த்தைகள்(Unknown words): ஆயத்துறை(v9), போஜனம்(v10), பிணியாளி(v12)
7.
வேற்றுமை ஒற்றுமைகளை ஒப்பிடுதல்(Contrast): பிணியாளி * சுகமுள்ளவன்(v12)
நீதிமான்* பாவிகள்(v13) 8.
சொல்லணிக்கலை(Rhetorical Question): உங்கள் போதகர் ஆயக்காரரோடும் பாவிகளோடும் போஜனம் பண்ணுகிறதென்ன? (v11)
7FFQ’s 1.
என்ன? (What) இயேசு ஆயக்காரனாகிய மத்தேயுவை அழைத்தல்(v9) 2.
எங்கே? (Where) மத்தேயுவின் வீட்டில்(v10) 3.
எப்பொழுது? (When) மத்தேயுவின் வீட்டில் போஜனம் பண்ணும் பொழுது(v10) 4.
யார்? (Who) இயேசு, பரிசேயர், சீஷர்கள், மத்தேயு, ஆயக்கரர்கள், பாவிகள் 5.
ஏன்? (Why) பாவிகளை இரட்சிப்பதற்காகவே கிறிஸ்து இயேசு
இவ்வுலகத்திற்க்கு வந்தார் என்பதை வெளிப்படுத்த.(v13) 6.
எப்படி? (How) மத்தேயுவிடம் என்னை பின்பற்றி வா என்று கூறியதன் மூலம்.(v9)
|
V9) இயேசு அவர் வாழ்ந்த ஊராகிய காப்பர்ணகூமிலிருந்து(அவ்விடம்) புறப்பட்டு போகையில்(Refer மத்தேயு 4:13) {சூழ்நிலையையும், வரலாற்று பின்னணியையும் வைத்து பொருள்
அறிந்துள்ளோம்} ஆயத்துறை- வரி வசூலிக்கும் துறை(வார்த்தையின் பொருளை வைத்து பொருள் அறிந்துள்ளோம்) V10) இயேசு ஆயத்துறையில் அமர்ந்திருந்த மத்தேயுவை
அழைத்தபொழுது, அங்கே இருந்த ஆயக்காரரும், பாவிகளும் அதை கண்டு இருக்கலாம், அதனால்
அவர்களும் இயேசுவையும் மத்தேயுவையும் பின்பற்றி சென்று அவர்களோடு
போஜனம்பண்ணினார்கள். {சூழ்நிலையை வைத்து
பொருள் அறிந்துள்ளோம்} V11) பரிசேயர்- தேவ ஆலயத்தில் முதன்மை இடம் வகிப்பவர்கள்.
வேதாகமத்தை அறிந்தவர்கள், கட்டளைகளை பின்பற்றுபவர்கள். (வார்த்தையின் பொருளை வைத்து பொருள் அறிந்துள்ளோம்) பரிசேயர் தங்களை நீதிமான்களாக கருதினதினாலும், பாவிகளோடும்
ஆயக்காரரோடும் சேராததினாலும், யூதர்கள் அவர்களை சமமாக எண்ணாததினாலும், பரிசேயர்
சீஷர்களிடம் ஏன் இயேசு பாவிகளோடும் ஆயக்காரரோடும் போஜனம் பண்ணுகிறார் என்று
கேட்டார்கள். ) {சூழ்நிலையையும், வரலாற்று பின்னணியையும் வைத்து பொருள்
அறிந்துள்ளோம்} V12,13) இயேசு கிறிஸ்து நீதிமான்களையல்ல பாவிகளையே
மனந்திரும்புவதர்க்கு அழைக்க வந்தார். அதனால் எப்படி ஒரு பிணியாளிக்கு வைத்தியன்
தேவையோ, சுகமுள்ளவனுக்கு வைத்தியன் தேவையில்லையோ, பாவிகளுக்கு தான் தாம் தேவை
என்பதை பரிசேயருக்கு இந்த உதாரணம் மூலம் எடுத்துரைத்தார். {சூழ்நிலையை வைத்து பொருள் அறிந்துள்ளோம்} பலியை அல்ல இரக்கத்தையே விரும்புகிறேன்- பரிசேயர் கட்டளைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்ததால்,
பலிகளை தவறாமல் செலுத்துவார்கள். ஆனால் மனிதரிடம் முக்கியமாக புறஜாதிகளிடம்
அன்பு செலுத்தாமல் அவர்களை தாழ்மையாக கருதினார்கள். அவர்களிடம் கரிசனையும்
இல்லாமல் இருந்தது. அதனால் இயேசு கிறிஸ்து தாம் பலியை அல்ல இரக்கத்தையே தாம்
விரும்புவதாக உரைத்தார். {சூழ்நிலையையும், சமூக பின்னணியையும் வைத்து பொருள்
அறிந்துள்ளோம்}
|
1. இயேசு கிறிஸ்து என்னை அழைக்கும் பொழுது அவருக்கு
கீழ்படிந்து அவரை பின்பற்ற வேண்டும் (V10) 2. நான் பரிசேயரை போல் இராமல்இயேசுவை போல் பாவிகளையும், ஆயக்காரையும் சமமாக எண்ணி, அவர்களோடு
நல்ல உறவு கொள்ள வேண்டும்.(V11) 3. பாவிகளுக்கு தான் நீதிமான்களை காட்டிலும்
மனந்திரும்புதல் அவசியம் என்பதை நான் உணர்ந்து அவர்களுக்கு அதிக நேரத்தையும், கவனத்தையும்
கொடுக்க வேண்டும் (V13) 4. நான் நீதிகளையும் சட்டங்களையும் காட்டிலும் மற்றவரை
நேசிப்பதையும், இறக்கத்தையுமே முதன்மையாக கருதுவேன். (V13)
|
No comments:
Post a Comment