வேத ஆராய்ச்சியுடன் ஐக்கியங்கள்
அறிமுகம்
சரியான மதிப்பீடுகளும், நோக்கமும், சரியான முன் உதாரனங்களும்
சமூகத்தில் இல்லாததால் நிறைய இளைஞர்களும் குடும்பங்களும் தற்காலிகமாக திருப்திப்படுத்துகிற
பொய்யான காரியங்களுக்கு நேராக வழிநடுத்தப்படுகிறார்கள், ஆனால் முடிவோ திசையில்லாத அர்த்தமில்லாத
வாழ்வாக இருக்கிறது. வாலிபர் ஐக்கியங்களும் குடும்ப ஐக்கியங்களும் கடுவுளை அறியவும்,
அவர்கள் வாழ்வின் நோக்கத்தை கடவுளுக்கு உள்ளாக விவரிக்கவும், அவர்கள் சமூகத்தில்
உப்பாக ஒளியாக மற்றவகளிடத்தில் தாக்கத்தை ஏற்படுத்தவும் வேதாகமத்தை சரியாக புரிந்துக்கொள்ளவும்
சரியானதை பின்பற்றவும் உதவுகிறது.
ஐக்கியங்கள்
கிறிஸ்துவை அறிந்தவர்களாக தேவையில் உள்ளவர்களுக்கு கிறிஸ்துவையும்
கடுவுளை சார்ந்த மதிப்பீடுகளையும் அறிமுகப் படுத்த கரிசனையுள்ளவர்கள் வேதாகம கோட்பாடுகளையும்
கொள்கைகளையும் வாரந்திர கூடுகைகள் மூலமும் தனிமையாக வழிநடத்துவதன் மூலமும் செய்யலாம்.
வாழ்வில் தொடர்ந்து வழிநடத்த ஐக்கியங்கள் பங்கேற்பாளர்களின்
விருப்பத்திற்கு ஏற்ப வாழ்க்கைப்பணியிலும் வெவ்வேறு தொழில் நிபுணர்கள் மூலம் உதவலாம்.
பங்கேற்பவர்கள் தலைவர்களாக உருவாக வாய்ப்புகளும் துணையும் உண்டு, மற்றும் தங்களை சார்ந்திருக்கும்
மற்றவர்களுக்கு தேவைக்கு ஏற்ப அவர்களே செயல்பாடுகளை செய்ய உத்வேகமும் பெறுவார்கள்.
தனிநபர் மற்றும் குழு வேத ஆராய்ச்சி
எப்பொழுதும் அழகான, சிறந்த, நம்பக்கூடிய புத்தகம் ‘வேதாகமம்’.
ஒரு இயந்திரத்திற்கு அதை உருவாக்கியவர் தரும் கையேட்டை போல, அது இறைவனிடமிருந்து கிடைத்த
ஒரு பெரிய, நிறைந்த கையேடு. மனிதனுடைய சிந்தை எப்பொழுதும் மாறும், கலங்கும், ஆனால்
வேதாகமம் எப்பொழுதும் முடிசிகளை அவிழ்க்கும்.
தனிநபர் வேத ஆராய்ச்சி தவறான விளக்கங்களை தவிர்க்க உதவுகிறது.
நாம் வேதாகமத்திற்கு சாியான விளக்கம் கொடுக்கும் பொழுது, வேதாகமத்திற்கான விளக்கம்
வெறுமனே வல்லுநர்களையோ அல்லது அதிகாரப்பூர்வ உரைபெயர்ப்பாளர்களையோ மட்டும் சார்ந்தது
அல்ல என்பதை நாம் புரிந்துகொள்வோம். தனிநபர் வேத ஆராய்ச்சி வேதாகமத்தை புரிந்துகொள்வதற்கும்,
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவைப் போலவே முதிர்ச்சியடைவதற்கும் உதவும். “வேதவாக்கியங்கள்
எல்லாம் தேவனால் அருளப்பட்டிருக்கிறது, மேலும் கற்பிப்பதற்கும், கண்டிப்பதற்கும், திருத்துவதற்கும்,
நீதியைப் பயிற்றுவிப்பதற்கும் லாபகரமானவை. 2 தீமோத்தேயு 3:16 ” என்பதை நாம் புரிந்துகொள்வோம்.
கடவுள் ஆதாம் முதல் தற்போதைய உலக மக்கள் வரை தலைமுறைகளின்
வரலாறு முழுவதும் மக்களிடம் பேசுகிறார். இயற்கை / படைப்பு, சத்தம், காட்சி, சூழ்நிலை,
மக்கள் மற்றும் புரிந்துகொள்ள முடியாத பிற வழிகள் போன்ற பல வழிகளில் கடவுள் பேச முடியும்
என்றாலும், கடவுள் முதன்மையாக வேதவசனங்களின் மூலம் பேசுகிறார். விசுவாசம் மற்றும் நடத்தை
தொடர்பான எல்லா விஷயங்களிலும் வேதாகமம் நம்முடைய அதிகாரம், வேதாகமத்தின் மூலம் காரியங்களை
உச்சரித்த கடவுள் என்றென்றும் மாறாமல் இருக்கிறார். நம் ஒவ்வொருவரின் முன்னோக்கு நம்முடைய
வெளிப்பாடு மற்றும் பின்னணியின் அடிப்படையில் வேறுபடுகிறது, எனவே கடவுள் மற்றும் கடவுளின்
வார்த்தையின் மீது பற்று இல்லாமல் வெவ்வேறு விஷயங்களை ஒப்புக் கொள்ளும் போது தவறாக
வழிநடத்தப்படுவதற்கும் தவறாகப் புரிந்துகொள்வதற்கும் ஒரு பெரிய வாய்ப்பு உள்ளது. சிறந்த
புத்தகத்தை தனிப்பட்ட முறையில் மற்றும் சிறிய குழுக்களாக முன்யோசனைகள் இல்லாமல் மிகவும்
கவனமாகப் படிப்பது, கடவுளுடைய வார்த்தையைப் பற்றிய நமது புரிதலை மேம்படுத்துகிறது,
கடவுள் மற்றும் வெவ்வேறு விஷயங்கள் பற்றிய நமது முன்னோக்கை விரிவுபடுத்துகிறது, மகிழ்ச்சியான
மற்றும் மறுரூபமான வாழ்க்கையை வழங்குகிறது, மேலும் கடவுளுக்குள்ளாக நோக்கங்களை வரையறுத்து
மற்றவர்களுக்கு பயனுள்ளவராக இருக்க செய்கிறது.
செயல்படும் விதம்:
வாலிபர்கள் மற்றும் குடும்ப ஐக்கியங்கள் ஒரு வீதி / பகுதி
/ கிராமத்திலுள்ள ஒரு வீடு / தேவாலயத்தில் வாரத்திற்கு ஒரு முறை அல்லது இரண்டு வாரங்களுக்கு
ஒருமுறை வேதாகம ஆராய்ச்சியுடன் தொடங்கப் படலாம். இது 2 இளைஞர்கள் / குடும்பங்களுடன்
கூட தொடங்கப்படலாம், மேலும் உள்ளூரில் உள்ள அனைவருடனும் சாதாரண உறவுகளால் அதிக உறுப்பினர்களைச்
சேர்க்க முயற்சிகள் மேற்கொள்ளப்படலாம்.
அமைதி வேளையை கடைப்பிடிப்பது (ஆதார இணைப்பு: https://thingsthattriumph.blogspot.com/2020/12/blog-post.html ) மற்றும் வேத ஆராய்ச்சியுடன் கூடிய ஐக்கியத்தின் நோக்கத்தை பற்றியும் அறிமுகப்படுத்த ஒரு மணிநேரத்திற்கு ஒரு அறிமுகக் கூட்டம் நடத்தப்படலாம்
15 வயதுக்கு மேற்பட்ட அனைத்து இளைஞர்களும் வாலிபர் ஐக்கியங்களில்
பங்கேற்கலாம். திருமணமான விசுவாசிகள் மற்றும் 35 வயதுக்கு மேற்பட்ட திருமணமாகாத நபர்கள்
குடும்ப ஐக்கியங்களில் பங்கேற்கலாம். குழுவில் உள்ள ஒவ்வொரு விசுவாசியான உறுப்பினரும்
சுழற்சி முறையில் குழு வேதாகம ஆராய்ச்சியுடன் ஐக்கியத்தை வழிநடத்தலாம்.
விசுவாசிகளுக்கு வேதாக ஆராய்ச்சியை வழிநடத்த உதவும் வகையில்
தனிப்பட்ட மற்றும் குழு வேதாகம ஆராய்ச்சி பட்டறை நடத்தப்படலாம். இது வேதாகமத்தை பற்றியும்
அதன் முக்கியத்துவத்தைப் பற்றியும் புரிந்துக்கொள்ள உதவும். சரியாக வேதாமத்தை புரிந்துகொள்ளும்போது
கருத்தில் கொள்ள வேண்டிய விஷயங்களையும் சரியாக பின்பற்றுவது பற்றியும், குழுக்களில்
எவ்வாறு திறம்பட ஆராய்வது என்பதையும் இது அறியச்செய்யும். பட்டறையின் தொடக்க நிகழ்வில்
7 மணிநேரம் எடுக்கும், மேலும் கற்றல் தொடர்ந்து சாத்தியமாகும்.
|
தொடக்க பட்டறைக்கான திட்டவரை |
||
|
நேரம் |
பகுதி |
வளங்களின் இணைப்பு |
|
1மணிநேரம் |
வேதாகமத்தின் வரலாறு மற்றும் முக்கியத்துவம் |
https://thingsthattriumph.blogspot.com/2020/04/blog-post.html
|
|
1மணிநேரம் |
தனிநபர் வேத ஆராய்ச்சியின் அறிமுகம் |
https://thingsthattriumph.blogspot.com/2020/05/blog-post_7.html
|
|
1மணிநேரம் |
தொகுப்பாய்வு வேத ஆராய்ச்சி (கவனித்தறிதல்) |
https://thingsthattriumph.blogspot.com/2020/05/blog-post_7.html
|
|
1மணிநேரம் |
தொகுப்பாய்வு வேத ஆராய்ச்சி (கவனித்தறிதல் பயிற்சி) |
https://thingsthattriumph.blogspot.com/2020/11/blog-post_29.html
|
|
30நிமிடங்கள் |
தொகுப்பாய்வு வேத ஆராய்ச்சி (விளக்கமறிதல்) |
https://thingsthattriumph.blogspot.com/2020/05/blog-post_7.html
|
|
30 நிமிடங்கள் |
தொகுப்பாய்வு வேத ஆராய்ச்சி (விளக்கமறிதல் பயிற்சி) |
https://thingsthattriumph.blogspot.com/2020/11/blog-post_29.html
|
|
30 நிமிடங்கள் |
தொகுப்பாய்வு வேத ஆராய்ச்சி (கடைப்பிடித்தல்) |
https://thingsthattriumph.blogspot.com/2020/05/blog-post_7.html
|
|
30 நிமிடங்கள் |
தொகுப்பாய்வு வேத ஆராய்ச்சி (கடைப்பிடித்தல் பயிற்சி) |
https://thingsthattriumph.blogspot.com/2020/11/blog-post_29.html
|
|
1 மணிநேரம் |
Group Bible Study (Introduction and
Demonstration) |
https://thingsthattriumph.blogspot.com/2020/11/blog-post_26.html
|
(குறிப்பு: பயிற்சிகள் மற்றும் தனி நபர் மற்றும் குழு வேதாகம ஆராய்ச்சிகளுக்குப் பயன்படுத்தப்படும் சில புத்தகங்களின் வலைப்பக்கங்களை Things That Triumph இல் பயன்படுத்திக்கொள்ளலாம் மற்றும் மலிவு விலையில் அச்சிடப்பட்ட புத்தகத்தை பெறலாம். Email- fwbibles@gmail.com ; Ct-9944695610).
தொடர்ந்து செயல்படுதல்:
தொடர்புடைய இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட வாலிபர் மற்றும்
குடும்ப ஐக்கியங்கள் சில சிறப்பு கூட்டங்கள் / மாநாடு / வேதாகம வினாடி வினா போட்டி
போன்றவற்றை வருடத்திற்கு ஒரு முறை திட்டமிடலாம். சுற்றியுள்ள ஒருங்கிணைந்த கிராமங்கள்
அல்லது பகுதிகளில் உள்ள இளைஞர்கள் மற்றும் குடும்ப ஐக்கியங்கள் குறைந்தபட்சம் 3 மாதங்களுக்கு
ஒரு முறை சந்திக்கலாம்.
மாணவர்கள், குறிப்பிட்ட தொழில் வல்லுநர்கள் போன்ற குறிப்பிட்ட
பங்கேற்பாளர்களைக் கொண்ட பிற வேதாகமம் மையப்படுத்தப்பட்ட நிறுவனங்கள் அல்லது ஐக்கியங்களுடன்
இணைவதன் மூலம் ஐக்கியத்தில் உள்ள அந்த வகை பங்கேற்பவர்கள் அதிக பயன் பெறுவார்கள்.
தொகுப்பு:
பெரும்பாலான இடங்களில் இளைஞர் மற்றும் குடும்ப ஐக்கியங்கள்
தொடங்கப்படுகிறது, ஆனால் அது வழக்கமாக நடைபெறுவது இல்லை / வளருவதும் இல்லை, ஏனெனில்
அது வழிநடத்தும் நபரை முழுமையாக சார்ந்துள்ளது. ஐக்கியங்களில் உள்ள ஒவ்வொரு விசுவாசியும்
தலைமையை எடுத்து, வேதாகமத்தை சரியாகப் புரிந்துகொள்வதன் மூலமும் தங்கள் எண்ணங்களைப்
பகிர்ந்து கொள்ளும்போதும், அதிக கற்றல் மற்றும் ஒழுங்குமுறை இருக்கும், படிப்படியாக
ஒரு அடுக்கு தொடர் தாக்கத்தை ஏற்படுத்தும். ஒவ்வொரு விசுவாசியும் அவர்களுடன் தொடர்புடைய
அவிசுவாசிகளுக்கு கற்பிக்க முடியும். படிப்படியாக, வேதாகமத்திற்கு முரணான போதனைகளை
அகற்றலாம். மக்களிடையே பிணைப்பும் ஒற்றுமையும் அதிகரிக்கும் மற்றும் ஆற்றலை அதிகபட்சமாகப்
பயன்படுத்துவதன் மூலம் பல நற் கிரியைகளை செய்ய முடியும்.
No comments:
Post a Comment