Sunday, 19 April 2020

வேதாகமத்தின் உயர்ந்ததன்மை


நம்முடைய கைகளில் இருக்கும் வேதாகமத்தின் வரலாறு
கையெழுத்து பிரதியிலிருந்து கைகளில் இருக்கும் அச்சுப் பிரதிகள் வரை

அறிமுகம்
வேதாகமம் என்ற தமிழ் வார்த்தையின் கிரேக்க மூலம் பிப்லியோஸ்/ பிப்லியோன் என்பதாகும், அதற்குச் சுருள் அல்லது புத்தகம் என்று அர்த்தம். வேதாகமம் என்பது ஒரு தனி புத்தகம் இல்லை, அது புத்தகங்களின் புத்தகம். கிறிஸ்தவ வேதாகமம் 66 புத்தகங்களைக் கொண்டு, பழைய ஏற்பாட்டில் 39 புத்தகங்கள் எனவும், புதிய ஏற்பாட்டில் 27 புத்தகங்கள் எனவும் பிரிந்துள்ளது. வெளியாகம புத்தகங்கள்/ பகுதிகள் (ஏறக்குறைய 14 புத்தகங்கள்). வேதாகமம் ஏறக்குறைய 1600 வருடங்கள் (ஏறக்குறைய 1400கி.மு. விலிருந்து 100கி.மு. வரை), வெவ்வேறு காலகட்டத்தில் கலாச்சாரங்களில் வாழ்ந்த ராஜாக்கள், மேய்ப்பர்கள், தீர்க்கதரிசிகள் மற்றும் தலைவர்கள் என ஏறக்குறைய 40 ஆக்கியோன்களால் எழுதப்பட்டுள்ளது. யூதர்களுடைய பழைய ஏற்பாடு தானக், மற்றும் அதில் உள்ள புத்தகங்கள் பெரும்பாலும் எபிரேயு மற்றும் சிறிது அரமைக் இல் எழுதப்பட்டுள்ளது. புதிய ஏற்பாடடு பெரும்பாலும் கிரேக்கில் எழுதப்பட்டுள்ளது.

வேதாகம புத்தகங்களின் கால வரையறை- பழைய ஏற்பாடு
புத்தகங்கள்
ஆக்கியோனாக இருக்க கூடியவர்
எழுதப்பட்ட காலம்  (தோராய மாக)
ஆதியாகமம், யாத்திராகமம், லேவியராகமம், எண்ணாகமம், உபாகமம்
மோசே
1400 கி.மு.
யோசுவா
யோசுவா
1350 கி.மு.
நியாயாதிபதிகள், ரூத், 1 சாமுவேல், 2 சாமுவேல்
சாமுவேல்/ நாத்தான்/ காத்
1000 - 900 கி.மு.
1 இராஜாக்கள், 2 இராஜாக்கள்
எரேமியா
600 கி.மு.
1 நாளாகமம், 2 நாளாகமம், எஸ்ரா, நெகேமியா
எஸ்ரா
450 கி.மு.
எஸ்தர்
மொர்தேகாய்
400 கி.மு.
யோபு
யோபு, மோசேயினால் தொகுக்கப்பட்டிருக்கலாம்
1400 கி.மு.
சங்கீதம்
வெவ்வேறு ஆக்கியோன்கள் (ஆசாப், எஸ்ரா, கோராவின் மகன்கள், ஹேமான், ஈதன், மோசே, முதலியவர்கள்)
1000 - 400 கி.மு.
நீதிமொழிகள்
சாலமோன், ஆகூர், லேமுவேல்
900 கி.மு.
பிரசங்கி, சாலோமோனின் உன்னதப்பாட்டு
சாலமோன்
900 கி.மு.
ஏசாயா
ஏசாயா
700 கி.மு.
எரேமியா, புலம்பல்
எரேமியா
600 கி.மு.
எசேக்கியேல்
எசேக்கியேல்
550 கி.மு.
தானியேல்
தானியேல்
550 கி.மு.
ஓசியா
ஓசியா
750 கி.மு.
யோவேல்
யோவேல்
850 கி.மு.
ஆமோஸ்
ஆமோஸ்
750 கி.மு.
ஒபதியா
ஒபதியா
600 கி.மு.
யோனா
யோனா
700 கி.மு.
மீகா
மீகா
700 கி.மு.
நாகூம்
நாகூம்
650 கி.மு.
ஆபகூக்
ஆபகூக்
600 கி.மு.
செப்பனியா
செப்பனியா
650 கி.மு.
ஆகாய்
ஆகாய்
520 கி.மு.
சகரியா
சகரியா
500கி.மு.
மல்கியா
மல்கியா
430 கி.மு.

வேதாகம புத்தகங்களின் கால வரையறை- புதிய ஏற்பாடு
புத்தகங்கள்
ஆக்கியோனாக கருதப்படுபவர்
எழுதப்பட்ட காலம் (ஏறக்கு றைய)
மத்தேயு
மத்தேயு
கி. பி. 55
 மாற்கு 
ஜான் மாற்கு
கி. பி. 50
லூக்கா
லூக்கா
கி. பி. 60
யோவான்
யோவான்
கி. பி. 90
அப்போஸ்தலரின் நடபடிகள்
லூக்கா
கி. பி. 65
 ரோமர், 1 கொரிந்தியர், 2 கொரிந்தியர், கலாத்தியர், எபேசியர், பிலிப்பியர், கொலோசெயர், 1 தெசலோனிக்கேயர், 2 தெசலோனிக்கேயர், 1 தீமோத்தேயு, 2 தீமோத்தேயு, தீத்து, பிலேமோன்,
பவுல்
கி. பி. 50-70
எபிரெயர்
தெரியவில்லை, எனினும் பவுல், லூக்கா அல்லது அப்போலோ  எழுதியிருக்கலாம் என கருதப்படுகிறது
கி. பி. 65
யாக்கோபு
யாக்கோபு
கி. பி. 45
1 பேதுரு, 2 பேதுரு
பேதுரு
கி. பி. 60
1 யோவான், 2 யோவான், 3 யோவான்
யோவான்
கி. பி. 90
யூதா
யூதா
கி. பி. 60
வெளிப்படுத்தின விசேஷம்
யோவான்
கி. பி. 90

திருமுறைப்படுத்துதல்- பழைய ஏற்பாடு
யூதர்களுடைய வரலாற்று பதிவு தோல் சுருள்களிலும், தகடுகளிலும் பல நூற்றாண்டுகளாக எழுதப்பட்டுள்ளது. முக்கியமாகக் கி.மு. 1400 இல் சீனாயில் மோசேயினால் எழுதப்பட்ட/ தொகுக்கப்பட்ட முதல் ஐந்து புத்தகங்கள் தோரா (கட்டளைகள்) என அழைக்கப்படுகிறது. மற்ற வேதாகம புத்தகங்கள் அடுத்த 1000 ஆண்டுகளில் யூத மக்களால் எழுதப்பட்டதாகவோ ஒருங்கிணைக்கப்பட்டதாகவோ இருக்கிறது. கி.மு. 400 இல் போதகர்களைக் கொண்ட குழுவினர், கட்டளைகள் மற்றும் யூத வேத புத்தகங்களை வகுத்தனர், பிறகு ஒரு தொகுதி புத்தகங்களை முழுமையான தெய்வீக தன்மையும் அங்கீகாரமும் பெற்றதாக உணர்ந்தனர். காலப்போக்கில் கட்டளைகள் (தோரா), தீர்க்கதரிசனம் (நேபீம்), மற்றும் வரலாற்று புத்தகங்கள் (கேத்துபீம்) என எபிரேய வேதாகமம் தலைப்பு வாரியாக அடுக்கப்பட்டது. இம்மூன்றின் எபிரேய முதல் எழுத்து- தா, , க் என்பது எபிரேய வேதாகமத்தின் பெயராகி தானக் என ஆனது. இதைத் தவிர்த்து இயேசுவும் மற்ற அப்போஸ்தலர்களும் பழைய ஏற்பாடு பகுதிகளை மேற்க்கோள் காட்டி, அதனுடைய தெய்வீக தன்மையை அங்கீகரித்தனர்.

திருமுறைப்படுத்துதல்- புதிய ஏற்பாடு
Ø  கி.பி. 40 தொடங்கி கி.பி. 100 வரை, இயேசுவினுடைய உடன் சாட்சிகளாகிய மத்தேயு, மாற்கு, லூக்கா, யோவான், பவுல், யாக்கோபு, பேதுரு, யூதா முதலியவர்கள் சுவிசேஷ புத்தகங்கள், நிருபங்கள் அல்லது மற்ற காரியங்களையும் எழுதினர், அதுவே வேதாகமத்தின் புதிய ஏற்பாடு ஆகியது. இந்த ஆக்கியோன்கள் வேதாகமத்தின் 31 பழைய ஏற்பாட்டு புத்தகங்களிலிருந்து மேற்க்கோள் காட்டியுள்ளனர், தாங்கள் எழுதியவற்றை பரவலாகப் பகிர்ந்தனர், ஆதலால் கி.பி. 150 ற்குள் முதற் நூற்றாண்டுக் கிறிஸ்தவர்களுக்கு அது கிடைத்தது, அதுவே புதிய உடன்படிக்கையென அழைக்கப்பட்டது. கி.பி. 397 இல், வேதாகமத்தை தவறான போதகங்களிலிருந்து விலக்கிக் காக்க, தவறான மதங்கள் பரவுவதை தடுக்க, தற்போது உள்ள 27 புத்தகங்களைப் புதிய ஏற்பாடாக நிச்சயித்து, கார்தேச் இல் நடைபெற்ற குருமார் கூட்டத்தில் அதன் தெய்வீக தன்மையை அங்கீகரித்தனர். ஒரு புத்தகம் புதிய ஏற்பாட்டில் இடம்பெற வேண்டுமா வேண்டாமா என்பதை தீர்மானிக்க் பூர்வீக திருச்சபை மூன்று அளவுக்கோல்களை கொண்டிருந்தனர்
Ø  முதலாவது, புத்தகம்/ நிருபம்/ போதனை அபோஸ்தலர் அங்கீகாரம் கொண்டதாக இருக்க வேண்டும்- புத்தகம்/ நிருபம்/ போதனை அபோஸ்தலர்களால் எழுதப்பட்டிருக்க வேண்டும், இல்லையேல் எழுதியவர்கள் சாட்சிகளாகவோ, அப்போஸ்தலர்களுக்கு நெருங்கிய தொடர்புள்ளவர்களாகவோ இருக்க வேண்டும்.
Ø  இரண்டாவது, புத்தகம்/ நிருபம்/ போதனை நிச்சயமான உண்மையைச் சார்ந்த விசுவாசத்தை உறுதி செய்வதாக இருக்க வேண்டும்- புத்தகம்/ நிருபம்/ போதனை கிறிஸ்தவ வரலாற்று உண்மைகளுக்கும், சபையின் அங்கீகரிக்கப்பட்ட உண்மையை அடிப்படையாகக் கொண்ட சட்டதிட்டங்களுக்கு ஒற்றுப்போவதாகவும் இருக்க வேண்டும்.
Ø  மூன்றாவது, புத்தகம்/ நிருபம்/ போதனை தொடர்ந்து ஏற்றுக்கொள்ளப்பட்டதாகவும் விசுவாசிகளால் உபயோகிக்கப்பட்டதாகவும் இருக்க வேண்டும்.
தோமாவின் சுவிசேஷம் போன்ற பல புத்தகங்கள் புதிய ஏற்பாட்டில் சேர்க்கப்படவில்லை, ஏனெனில் அவை திருமுறைப்படுத்துதலின் நம்பகத்தன்மைக்கு ஒற்றுப்போகவில்லை.

இலக்கிய திறனாய்வு:
இந்தப் பூமியில் வேதாகமத்தை போன்று மற்ற எந்தப் புத்தகமும் இலக்கிய திறனாய்விற்கு உட்படுத்தப்படவில்லை. உண்மை என்னவெனில் அவிசுவாசிகளால் மாத்திரம் அல்ல, அதனை அங்கீகரிக்கவும் அதினுடைய உண்மைத்தன்மையை நிச்சயிக்கவும், விசுவாசிகளாலும் திறனாய்விற்கு உட்படுத்தப்படுகிறது. அவிசுவாசிகளால் கூறப்படும் மாறுப்பட்ட கருத்துகளுக்குக் காரணம், அவர்கள் அதை சரியாகப் புரிந்துக்கொள்ளாதது தான், அவர்கள் அதினுடைய அனைத்து பகுதியும் நேரடியாகப் பொருள் தந்து கடைப்பிடிப்பதற்கு ஏற்ற வகையில் இருக்க வேண்டுமென எண்ணுகின்றனர். ஒரு தனிப்பட்ட நபரை முழுமையாகத் திருப்திப்படுத்த எந்தப் புத்தகத்தையும் யாராலும் எழுத முடியாது, வேதாகமமும் அதற்கு விலக்கல்ல. அப்படியொரு புத்தகத்தை எழுதினாலும் அதில் உண்மை கலப்புடன் இருக்கும். வேதாகமத்தை பற்றிய இலக்கிய திறனாய்விற்கு சமர்பிக்கப்பட்ட கோப்புகள் உண்மைக்குரிய தேர்ச்சியில் வெற்றி பெறவில்லை.
‘தேவனுடைய வார்த்தை’ எப்பொழுதும் மாறாதது, மற்றும் ‘உண்மை’ ஒரு நபர் விருப்பப்பட்டாலும் இல்லையெனினும் நிலைத்திருக்க கூடியது.

வெளிப்புற உத்தரவாதங்கள்:
அழியப்பெறாத தன்மையும், நிறைவேறிய தீர்க்கதரிசனமும் வேதாகமத்தின் மிக முக்கிய வெளிப்புற உத்தரவாதங்கள். பிரபலமான வேதாகம நிபுணர் எப்.எப். ப்ரூஸ் கூறுவதாவது, ‘உலகில் உள்ள எந்த ஒரு பூர்வீக இலக்கியமும் புதிய ஏற்பாடு பெற்றிருப்பதை போல வார்த்தைகளின் நிச்சயத்தையும் நிருபனத்தையும் பெறவில்லை’.
ஹோமர் இலியாட் என்னும் பிரபலமான கிரேக்க இலக்கியம் தான் இரண்டாவது பெரிதும் பாதுகாக்கப்பட்ட தற்போது வரை 643 பிரதிகள் கண்டுபிடிக்கப்பட்ட தொன்மை வளமிக்க புத்தகமாகும், அதில் 764 வாக்கியங்களில் வார்த்தைகள் கேள்விகளுக்கு உட்பட்டது, ஆனால் புதிய ஏற்பாட்டில் ஏறக்குறைய 40 வாக்கியங்களின் வார்த்தைகள் மாத்திரமே கேள்விக்குட்பட்டது. நிறைய பேருக்கு ஷேக்ஸ்பியரின் 37 பாகங்களுக்கு (1600 ஆம் ஆண்டுகளில் எழுதப்பட்டது) பிரதிகள் இல்லை என்பதும், நிபுணர்கள் அதில் இருக்கும் இடைவெளிகளை நிரப்பினார்கள் என்பதும் தெரியாது. புதிய ஏற்பாடு கிரேக்க மொழியில் 5600 பிரதிகளின் பாகங்களைக் கொண்டது, காரியங்கள் இழக்கப்படவில்லை என்பதை அது உணர்த்துகிறது.
ஒரு சில வசனங்களைத் தவிர்த்து புதிய ஏற்பாடு பகுதியில் உள்ள அனைத்து பகுதிகளையும் வேதாகமத்தை தாண்டி இரண்டாம் மூன்றாம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த சபை போதகர்களின் கடிதங்களால் திரும்பவும் கட்டுவிக்க முடியும்.
Ø  கிளெமென்ட் (30-100 கி.பி.) - 97 கி.பி. இல் கொரிந்து சபைக்கு ஒரு கடிதம் எழுதினார். அவர் பவுல் அவர்களுக்குச் சில வருடங்கள் முன்பு எழுதின கடிதத்தை நினைவுப்படுத்தி, அதற்குச் செவிகொடுக்க சொன்னார். கிளெமென்ட் என்பவர் பவுளோடு கூட ஊழியம் செய்தவர் (பிலிப்பியர் 4: 3). அவர் லூக்கா, அப்போஸ்தலர், ரோமர், 1 கொரிந்தியர், எபேசியர், தீத்து, 1 மற்றும் 2 பேதுரு, எபேசியர், மற்றும் யாக்கோபு ஆகிய புத்தகங்களில் இருந்து வசனங்களை சுட்டிக்காட்டி உள்ளனர்.
Ø  அபோஸ்தல குருமார்களாகிய இக்னேசியஸ் (30-107 கி.பி.), பாளிகார்ப் (65-155 கி.பி.), மற்றும் பாபியஸ் (70-155 கி.பி.) புதிய ஏற்பாட்டின் 2 மற்றும் 3 யோவான் ஆகிய 2 புத்தகங்களைத் தவிர்த்து அனைத்து புத்தகங்களிலும் இருந்து வசனங்களைச் சுட்டிக்காட்டி உள்ளனர். எனவே அவர்கள் கிட்டத்தட்ட முழு புதிய ஏற்பாட்டையும் நிச்சயித்தனர் எனலாம். இக்னேசியசும் பாளிகார்பும் அப்போஸ்தலர் யோவானுடைய சீஷர்கள்.
Ø  ஜஸ்டின் மார்டியர் (110-165 கி.பி.) அவர்கள் மத்தேயு, மாற்கு, லூக்கா, யோவான், அப்போஸ்தலர், ரோமர், 1 கொரிந்தியர், கலாத்தியர், 2 தெசலோனியர், எபிரெயர், 1 மற்றும் 2 பேதுரு, வெளிப்படுத்தின விசேஷம் முதலிய 13 புத்தகங்களை மேற்க்கோள் காட்டியுள்ளார்.
Ø  இரேனியஸ் (120-202 கி.மு.) தவறான போதனைகளைப் பற்றிய ஐந்து தொகுதிகளைக் கொண்ட புத்தகத்தை எழுதியுள்ளார், அதில்
Ø  அவர் 3 யோவான் தவிர்த்து அனைத்து புதிய ஏற்பாடு புத்தகத்தில் இருந்தும் மேற்க்கோள் காட்டியுள்ளார்.
Ø  அவர் புதிய ஏற்பாடு புத்தகத்திலிருந்து 1,200 முறை மேற்க்கோள் காட்டியுள்ளார்.
அப்போஸ்தலருடைய புத்தகத்தில் எருசலேம் சபை மிகவும் முக்கிய பங்கு வகிக்கிறது, ஆனால் அதில் 70 கி.பி. இல் நடந்த பட்டணத்தின் அழிவு குறிப்பிடப்படவில்லை. யூத வரலாற்று நிபுணரான யோசப்பஸ் அதை யூதர்களுடைய சரிவு எனக் குறிப்பிட்டுள்ளார், ஏனெனில் அவர்கள் இயேசு கிறிஸ்துவின் சகோதராகிய யாக்கோபை கொன்று இருந்தனர்.

கையெழுத்து பிரதிகள்- பழைய ஏற்பாடு
1940 மற்றும் 1950 இல் கண்டுபிடிக்கப்பட்ட இறந்த கடல் சுருள்கள், கி.பி. முதல் மூன்று நூற்றாண்டுகளில் யூதர்களின் வேதாகமத்தின் (பழைய ஏற்பாடு) நம்பகத்தன்மையையும் கைமாற்றலையும் உறுதி செய்து அதை நிச்சயிக்கிறது. வேதாகம கைபிரதிகள் பூர்வீக எழுத்துக்களினோடு ஒப்பிடப்பட்டு, சிறந்த முறையில் பாதுகாக்கப்பட்ட இலக்கிய நூல்களாகத் தனிப்பட்டு காணப்படுகின்றன. குறிப்பிடத் தக்க விதமாக மத்திய கிழக்கு, மெடிட்டேரியன் மற்றும் ஐரோப்பா பகுதிகளில் ஆயிரக்கணக்கான, ஒன்றிற்கு ஒன்று ஒத்துப்போகிற பழைய ஏற்பாட்டு கைபிரதிகள் மற்றும் உதிரிகள் மறுபடியும் எழுதப்பட்டுள்ளன. கூடுதலாக, இந்த எழுத்துக்கள் போதுமான அளவு பழைய ஏற்பாடு கிரேக்க பிரதியுடன் ஒத்துப்போகிறது.
இன்றும் பயன்படுத்தப்படும் பழைய ஏற்பாட்டின் கையெழுத்து பிரதிகள் பின்வருமாறு,
இறந்த கடல் சுருள்கள்: 200 கி.மு. – 70 கி.பி. அதில் ஏசாயாவின் புத்தகமும், எஸ்தரை தவிர்த்து மற்ற பழைய ஏற்பாட்டு புத்தகங்களும் உள்ளன.
ஜெனிசா துண்டுப் பிரதிகள்: ஒரு பழைய தேவாலயத்தில் 1947 கண்டுப்பிடிக்கப்பட்ட எபிரேய அரமைக் பழைய ஏற்பாடு பிரதிகள், 400 கி.பி. யில் உள்ளவைகளாகக் கணக்கிடப்படுகிறது.
பென் அஷேர் கையெழுத்து பிரதிகள்: ஐந்து அல்லது ஆறு தலைமுறைகளாக மாசோரெடிக் எபிரேய எழுத்துகளால் ஒரு குடும்பம் பழைய ஏற்பாடு பிரதிகளை 700-950 கி.பி. யில் உண்டாக்கியுள்ளது. பின்வருவன மாசோரெடிக் எபிரேய எழுத்துகளுக்கு உதாரணங்கள்.
·         அலெப்போ கையெழுத்து சுவடி: அதில் பழைய ஏற்பாடு முழுமையாக உள்ளது, 950 கி. பி. எனக் கணக்கிடப்படுகிறது. அதில் நான்கில் ஒரு பங்கு 1947 ஆம் ஆண்டு யூதர்களுக்கு எதிரானவர்களின் கலவரத்தால் அளிக்கப்பட்டது.
·         கையெழுத்து சுவடி லெனின்கிரேன்சிஸ்: பென் அஷேர் குடும்பத்தில் கடைசி நபர் 1008 கி.பி. யில் எபிரேய பழைய ஏற்பாட்டை முழுவதும் எழுதினார்.
கையெழுத்து பிரதிகள்- புதிய ஏற்பாடு
புதிய ஏற்பாட்டின் கையெழுத்து பிரதிகளின் சான்றுகள் மிகவும் நம்பகத்தன்மை உடையவை, ஏறக்குறைய 25,000 சமயக்கால கையெழுத்து பிரதிகள் கண்டுப்பிடிக்கப்பட்டு குறிக்கப்பட்டுள்ளது, அதில் 5,600 பிரதிகள் அல்லது புத்தகத்தின் துகள்கள் பண்டைய கிரேக்கத்தில் உள்ளவை. சில கையெழுத்து பிரதிகள் இரண்டாம் மற்றும் மூன்றாம் நூற்றாண்டுகளில் எழுதப்பட்டவை, மூல நூலிற்கும் மிகவும் நெருங்கிய கையெழுத்துப் பிரதிக்கும் வித்தியாசம் 40-60 வருடங்கள்.
ஜூலியஸ் சீசருடைய  காலிக் போர்கள் (10 கையெழுத்து பிரதிகள் மீதமுள்ளன, மூல நூலிற்கு நெருங்கிய கையெழுத்து பிரதி 1000 வருடம் பழமையானது), பிளினி த யங்கருடைய இயற்க்கை வரலாறு (7 கையெழுத்து பிரதிகள், 750  ஆண்டுகள் பின்தங்கியது), துசிடைட்டுடைய வரலாறு (8 கையெழுத்து பிரதிகள், 1300 ஆண்டுகள் பின்தங்கியது), ஹீரோடோடஸ் வரலாறு (8 கையெழுத்து பிரதிகள், 1350 ஆண்டுகள் பின்தங்கியது), பிளேடோ (7 கையெழுத்து பிரதிகள், 1300 ஆண்டுகள் பின்தங்கியது), மற்றும் டசிடஸ் உடைய அன்னல் (20 கையெழுத்து பிரதிகள், 1000 வருடங்கள் பின்தங்கியது).
இன்று வரை புதிய ஏற்பாட்டிற்கு ஏறக்குறைய 5600 கையெழுத்து பிரதிகள் உள்ளது. பழைய கையெழுத்து பிரதிகள் பாப்பிரஸில் எழுதப்பட்டுள்ளது, மற்றும் சிறிது காலம் கழித்து எழுதப்பட்ட கையெழுத்து பிரதிகள் காகிதத்தோளில் எழுதப்பட்டுள்ளது.
125 கி.பி. – புதிய ஏற்பாட்டின் கையெழுத்து பிரதி, முடிக்கப்பட்ட மூல நூலிற்கு நெருங்கியதாக ஏறக்குறைய 125 கி.பி. யில் எழுதப்பட்டது, அது ஏறக்குறைய 35 ஆண்டுகள் இடைவெளியே ஆகும். அதற்கு பா 52’ என்று பெயரிடப்பட்டுள்ளது, அதில் யோவான் 18 ம் அதிகாரத்தின் ஒரு சில பகுதிகள் உள்ளன. (‘பா’ என்பது பாப்பிரஸ்ஸை குறிக்கும்).  
200 கி.பி.- போட்மர் பா 66 என்ற பாப்பிரஸ் கையெழுத்து பிரதியில் யோவானுடைய சுவிசேஷம் பெரிய அளவில் உள்ளது.
200 கி.பி. – செஸ்டர் பீட்டி வேதாகம பாப்பிரஸ் பா 46 இல் பவுலின் கடிதங்களும் எபிரேயரும் உள்ளன.
225 கி.பி. – போட்மர் பாப்பிரஸ் பா 75 இல் லூக்கா மற்றும் யோவானின் சுவிசேஷம் உள்ளன.
250-300 கி.பி- செஸ்டர் பீட்டி வேதாகம பாப்பிரஸ் பா 45 இல் நான்கு சுவிசேஷ புத்தகங்களும் அப்போஸ்தலருடைய நடபடிகளும் உள்ளன.
350 கி.பி. - சினாய்டிகஸ் கையெழுத்து சுவடி யில் முழு புதிய ஏற்பாடும், பெருமளவில் பழைய ஏற்பாடும் கிரேக்க மொழியில் உள்ளன. அது ஜெர்மானிய அறிஞர் டிசென்டார்ப் சீனாய் மலையில் பாரம்பரிய மடத்திலிருந்து  கண்டுப்பிடித்தார்.
350 கி.பி. – வாடிக்கானஸ் கையெழுத்து சுவடி யில் புதிய ஏற்பாடு முழுதும் உள்ளன. அது வாட்டிகன் நூலகத்தில் 1475 கி.பி. முதல் உள்ளதாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.

தொல் பொருள் ஆராய்ச்சியும் அறிவியலும்
தொல் பொருள் ஆராய்ச்சி அறிவியல் சார்ந்த படிப்பாகும், அது 150 ஆண்டிற்கு  முன்பு வரை இல்லை, எனினும் பெரிய அளவில் தொல் பொருள் ஆராய்ச்சியும் அகழ்வாராய்ச்சியும் வேதாகமத்திற்கு சான்று அளிக்கிறது. 19ம் நூற்றாண்டிற்கு முன்புவரை தொல் பொருள் ஆராய்ச்சி ஒரு அறிவியாலாகக் கருதப்படவில்லை, சில தனிப்பட்ட ஆர்வமிக்க நபர்கள் புதையல்களை தேடும் விதமாகவே இருந்தது, பல அகழ்வாராய்ச்சிகள் சீர்குலைந்தன, மற்றும் கண்டறியப்பட்ட பல காரியங்கள் தொலைந்தன. கல்விக்கான ஆர்வம் வளர்ந்ததாலும், புது தொழில்நுட்ப காரியங்கள் ஊடுருவியதாலும், ஒரு முறையான அணுகுமுறை அகழ்வாராய்ச்சிக்கு நாம் வாழும் நூற்றாண்டில் கிட்டியது, அது பூர்விக உலகத்தைப் பற்றிய காரியங்களை வெளிப்படுத்தியது. ஆனால் ரேடியோ கார்பன் டேடிங்கும் மற்றும் சில கோட்பாடுகளும் உண்மையைக் கண்டுபிடிக்கும் நோக்கில் உண்மைக்கு மாறான கரியங்களாகின. அவற்றில் நிறைய குறைப்பாடுகள் உள்ளன, ஏனெனில் அது நிறைய காரணிகளைக் கொண்டும் சாத்திய கூறுகளைக் கொண்டும் அமைந்துள்ளது.
வேதாகமம் தன்னுடைய போதனைகளில் ஒருபோதும் இயற்கையின் விதிகளுக்கு மாறுப்படாது, எனினும் எல்லாவற்றிற்கும் ஆக்கியோனாகிய கடவுளுடைய முழு ஆளுமைத்தன்மையால் எல்லாவற்றையும் மாற்ற முடியும், மாற்றியும் உள்ளார், தேவையெனில் இனியும் மாற்றுவார். வேதாகமம் அனைத்து அறிவியல் கோட்பாடுகளையும் ஏற்காது, ஏற்க வேண்டிய அவசியமும் இல்லை. 

முற்காலத்திய மொழிபெயர்ப்புகள் - பழைய ஏற்பாடு
யூதர்களுடைய வேத வாக்கியங்கள் எல்லாம் கைகளால் எழுதப்பட்டிருந்தாலும், அவை பிரதிக்குப் பிரதி மிகவும் துல்லியமானது. யூதர்கள் தனிச்சிறப்புடைய வேத பாரகர்களை கொண்டிருந்தனர், அவர்கள் நகலாக எழுதும் பொழுதுத் தவறுகள் வராமல் இருக்க சிக்கலான, வழக்கமான சில முறைமைகளாகிய எழுத்துகளை வார்த்தைகளைப் பத்திகளை எண்ணுதல் போன்றவற்றை கொண்டிருந்தனர். இறந்த கடல் சுருள்கள் வேதபாரகர்களின் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாகப் பின்பற்றிய முறையைகளை மிகவும் நம்புவதற்க்குரியதாக நிச்சயிக்கிறது. பழைய ஏற்பாடு மிகவும் குறுகிய காலத்தில் அரமைக் யிலும் கிரேக்கிலும் மொழிபெயர்க்கப்பட்டது. 400 கி.பி. யில் பழைய ஏற்பாடு மொழிபெயர்ப்பு அரமைக் யில் உண்டானது, அதுவே அரமைக் டார்கம்ஸ் என அழைக்கப்பட்டது. பாபிலோனியர் சிறைபிடிப்பிற்கு பின்பு அரமைக் பேச ஆரம்பித்த யூதர்கள் தங்கள் பேச்சு மொழியில் பழைய ஏற்பாட்டைப் புரிந்துக்கொள்ளும் விதத்தில் அந்த மொழிபெயர்ப்பு இருந்தது. முதல் நூற்றாண்டில் இயேசுவின் பாலஸ்தீன வாழ்நாளின் பொழுது, அரமைக் பேச்சு மொழியாகவே இருந்தது. உதாரணத்திற்கு மாரநாதா என்பதற்கு ‘ ஆண்டவர் வந்திருக்கிறார்,’ என அர்த்தம்,- ‘[1 கொரிந்தியர் 16:22, புதிய ஏற்பாட்டில் உள்ள அரமைக் வார்த்தை. 250 கி.பி. யில் பழைய ஏற்பாடு கிரேக்கில் மொழிபெயர்க்கப்பட்டது. அந்த மொழிபெயர்ப்பு செப்டுவாஜின்ட் என்றழைக்கப்படுகிறது. அது சில நேரங்களில் ‘LXX’ (ரோம எண்ணில் 70) என ரோம எண்ணினால் வழங்கப்படுகிறது. ஏனெனில் அந்த மொழிப்பெயர்ப்பின் வேளையில் 70 – 72 மொழிப்பெயர்ப்பாளர்கள் எபிரேய பழைய ஏற்பாட்டைக் கிரேக்கத்திற்கு மொழிப்பெயர்த்துள்ளனர். புதிய ஏற்பாட்டை மொழிப்பெயர்த்த நபர்களால் பழைய ஏற்பாட்டு வசனங்களை மேற்க்கோள்க்காட்டப்பட அந்த மொழிபெயர்ப்பே பயன்ப்படுத்தப்பட்டது. பழைய ஏற்பாட்டின் ‘LXX’ மொழிப்பெயர்ப்பு ஆரம்பக்கால சபைகளால் பயன்படுத்தப்பட்டது. அந்தப் பயன்பாட்டின் பொழுது புத்தங்கங்களின் வரிசை நாம் இன்று பயன்படுத்தும் வேதாகமத்திற்கு ஒப்பாக வரலாற்று புத்தகங்கள் (ஆதியாகமம்- எஸ்தர்), கவிதை புத்தகங்கள் (யோபு- சாலோமோனின் உன்னதப்பாட்டு), தீர்க்கதரிசன புத்தகங்கள் (ஏசாயா- மல்கியா) என மாற்றப்பட்டது.
இன்றும் பராமரிக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ள பழைய ஏற்பாட்டின் கிரேக்க மொழிப்பெயர்ப்புகள் பின்வருமாறு,
செஸ்டர் பீட்டி பாப்பிரஸ் – அதில் ஒன்பது பழைய ஏற்பாடு புத்தகங்கள் கிரேக்க செப்டுவாஜின்ட் இல் உள்ளன, 100-400 கி.பி. கால அளவிற்குட்பட்டது.
வாடிகானஸ் கையெழுத்து சுவடியும், சினாய்டிகஸ் கையெழுத்து சுவடியும்  பழைய ஏற்பாடு கிரேக்க செப்டுவாஜின்ட் பெருமளவில், கிட்டத்திட்ட முழுவதும் கொண்டுள்ளது,  அது 350 கி.பி கால அளவிற்குட்பட்டது.

ஆரம்ப கால மொழிப்பெயர்ப்புகள் – புதிய ஏற்பாடு/ இரண்டு ஏற்பாடுகளும்
180 கி.பி. யில் அபோஸ்தலருடைய கைகளால் எழுதப்பட்டவை கிரேக்கத்திலிருந்து லத்தீன், காப்டிக் (எகிப்து) மற்றும் சிரியாக் (சிரியா) வில் மொழிப்பெயர்க்கப்பட்டது, அதுவே ரோமருடைய ராஜ்யத்திலும் அதைச் சுற்றிலும் பெரும்பாலும் அருளப்பட்ட வேத வாக்கியங்களாகக் கருதப்பட்டன. புதிய ஏற்பாட்டின் ஆரம்ப கால மொழிப்பெயர்ப்புகள் அது மொழிப்பெயர்க்கப்பட்ட கிரேக்க கையெழுத்து பிரதிகளில் உள்ள உள்ளார்ந்த கருத்துக்களை தரக்கூடியது.
195 கி.பி. – பழைய மற்றும் புதிய ஏற்பாட்டின் முதல் லத்தீன் மொழிபெயர்ப்பு பழைய லத்தீன் என்றழைக்கப்பட்டது, இரண்டு ஏற்பாடுகளும் கிரேக்க மொழியிலிருந்து மொழிப்பெயர்க்கப்பட்டது. 160-220 கி.பி. யில் வடக்கு அமெரிக்காவில் வாழ்ந்து  இறைமைநிலை ஆராய்ச்சி சார்ந்த ஒப்பந்தங்களை எழுதிய ஆலய போதகர் டேர்டுலியன் எழுதிய காரியங்களில் பழைய லத்தீனின் பகுதிகள் இடம் பெற்றுள்ளது.
300 கி.பி. – புதிய ஏற்பாட்டின் பழைய சிரியாக் என்ற மொழிப்பெயர்ப்பு கிரேக்கத்திலிருந்து சிரியாக்கிற்கு மொழிப்பெயர்க்கப்பட்டது.  
300 கி.பி. – காப்டிக் வேறுப்பட்ட மொழிப்பெயர்ப்புகள்: காப்டிக் என்பது எகிப்தில் பேசப்பட்ட நான்கு பேச்சு வழக்குகளைக் கொண்ட மொழி. வேதாகமம் அந்த நான்கு பேச்சு வழக்குகளிலும் மொழிப்பெயர்க்கப்பட்டது.
380 கி.பி. – புனிதர். ஜெரோமினால் லத்தீன் வல்கேட் மொழிப்பெயர்க்கப்பட்டது. அவர் பழைய ஏற்பாட்டை எபிரேயுவில் இருந்தும் புதிய ஏற்பாட்டைக் கிரேக்கில் இருந்தும் மொழிப்பெயர்த்தார். லத்தீன் வல்கேட் 1400 கி.பி. யில் கிறிஸ்தவ சீர்திருத்த புரட்சி நடைப்பெறும் வரை மேற்கில் உள்ள சபைகளுக்கு வேதாகமம் ஆனது. அது இன்று வரையும் ரோமன் கத்தோலிக்க சபைக்கு அதிகாரப்பூர்வ மொழிப்பெயர்ப்பாகத் தொடர்கிறது. கிறிஸ்தவ சீர்திருத்த புரட்சி மக்கள் பேசுகின்ற சாதாரண மொழிகளில் வேதாகமத்தை  மொழிப்பெயர்க்க வழிவகுத்தது.  மற்ற ஆரம்ப கால வேதாகம மொழிப்பெயர்ப்புகள் அரேமியன், ஜிஆர்ஜியன், எதியோபிக், ஸ்லேவிக், மற்றும் கோதிக் இல் உள்ளவை.
1380 கி.பி. -முதல் ஆங்கில வேதாகம மொழிப்பெயர்ப்பு ஜான் விக்கிளிப்பி ஆல் ஆனது. அவர் லத்தீன் வல்கேட்டிலிருந்து ஆங்கில மொழிக்கு மொழிப்பெயர்த்தர்ர். இது மொழிப்பெயர்ப்பிலிருந்து உண்டான மொழிப்பெயர்ப்பு, மூல மொழிகளாகிய எபிரேயு கிரேக்க மொழியிலிருந்து உண்டானது அல்ல. விக்கிளிப்பிக்கு கிரேக்கு எபிரேயு தெரியாததால் நிர்பந்தத்தில் லத்தீன் வல்கேட்டிலிருந்து மொழிபெயர்த்தார்.

உறுதித்தன்மைக்கு துயரளித்தல்/ அச்சுறுத்தல்:  
ஜான் விக்கிளிப்பி யின் போதனைகளும் ஆங்கிலத்தில் அவருடைய வேதாகம மொழிப்பெயர்ப்பும் போப் அவர்களை மிகவும் கோபம் கொள்ள செய்தது, விக்கிளிப்பி இறந்து 44 ஆண்டுகள் கழித்து, போப் விக்கிளிப்பியின் எழும்புகளை தோண்டி எடுத்து, நொறுக்கி, ஆற்றில் தூக்கி எரிய சொன்னார்.
விக்கிளிப்பியை பின்தொடர்கின்ற ஒருவரான, ஜான் ஹஸ் விக்கிளிப்பியின் கருத்துகளை பரவலாகப் பரப்பினார், மக்கள் தங்கள் சொந்த மொழியில் வேதாகமத்தை வாசிக்க வேண்டுமெனக் கருதினார், ரோம திருச்சபை லத்தீன் மொழி அல்லாத மொழி வேதாகமத்தை உபயோகிப்பத்தை தடுப்பதையும் மக்களைத் துன்புருத்துதலையும் வன்மையாகக் கண்டித்தார். 1415 யில் ஹஸ் ஐ எரித்து மரணிக்க செய்தனர், விக்கிளிப்பியின் கையெழுத்து பிரதி வேதாகமங்களை கொல்லியாக நெருப்பூட்ட பயன்படுத்தினர். ஹஸ்சினுடைய கடைசி வார்த்தைகளாவன, “ அடுத்த 100 ஆண்டுகளில், கடவுள் ஒரு மனிதனை எழுப்புவார், அவருடைய சீர்திருத்தத்தை யாராலும் தடுக்க முடியாது”.
ஏறக்குறைய 100 ஆண்டுகள் கழித்து, 1517 யில், மார்டின் லூதர் 95 கருத்தாய்வுகளான வாதங்களை விட்டன்பெர்க் சபைகளின் கதவுகளுக்கு முன்பு முன் வைத்தார் (அதில் அன்று இருந்த தவறான இறையியலும், ரோம கத்தோலிக்க சபையின் குற்றங்களுமான  95 பிரச்சனைகள் அட்டவணை இடப்பட்டது). ஹஸ் சினுடைய தீர்க்கதரிசனம் நிறைவேறியது, மார்டின் லூதர் சாதாரண மக்கள் பேசும் வழக்கத்தில் உள்ள ஜெர்மானிய மொழியில் வேதாகமத்தை மொழிப்பெயர்த்த முதல் நபராவார், அது மற்ற ஜெர்மானிய வேத மொழிப்பெயர்ப்புகளை விட மிகவும் எளிதாக இருந்தது.
1490 இல் மற்றொரு ஆக்ஸ்போர்ட் பேராசிரியர் தாமஸ் லினாக்கர், தனிப்பட்ட முறையில் 7வது மற்றும் 8வது ஹென்றி ராஜாக்களின் வைத்தியராகவும் இருந்தவர், அவர் கிரேக்கம் கற்க தீர்மானித்தார். சுவிசேஷ புத்தகங்களைக் கிரேக்கில் வாசித்தபிறகும், லத்தீன் வல்கேட்டின் மொழிப்பெயர்ப்பை ஒப்பிட்டபிறகும், அவர் தன்னுடைய குறிப்பேட்டில் இவ்வாறாக எழுதினார், ‘ஒன்று உண்மையான கிரேக்கில் உள்ளது சுவிசேஷம் அல்ல, இல்லையேல் நாம் கிறிஸ்தவர்கள் இல்லை.’ லத்தீன் மொழியில் இருந்த வேதாகமம் மிகவும் கலப்புள்ளதாக இருந்தது, அது சுவிசேஷம் சொல்லும் செய்திகளைக் காக்கவில்லை, வேதாகமத்தின் மூல மொழி லத்தீனாக இல்லாத பொழுதும், சபை லத்தீன் அல்லாத மொழியில் வேதாகமத்தை வாசிப்பவர்களைத் துயரப்படுத்தி, கொலை செய்யும் எனவும் மிரட்டியது.
ஜான் பனியன் (பிள்கிரீம் பிராகிரஸ் என்னும் புத்தகத்தின் ஆசிரியர்) மற்றும் நிறைய புனிதர்கள் கிறிஸ்தவ புரட்சி வேதாகமத்தை பின்பற்றியதற்கு ரோம கத்தோலிக்க சபையினால் துயர்படுத்தப்பட்டனர்.

அச்சுறுத்தலுக்கு/ துயர்களுக்கு காரணம்:
Ø  சபையின் யோசனைகளும் செயல்களும் வேதாகமத்திற்கு எதிரானது, எனவே மக்கள் தங்கள் மொழிகளில் வேதாகமத்தை வாசிக்க ஆரம்பித்ததால், சபையின் வருமானமும் அதிகாரமும் பாதிக்கப்படக்கூடும்.
Ø  அவர்கள் தொடர்ந்து சலுகைகள் (பாவ மன்னிப்பு) மற்றும் பிரியமானவர்களுடைய ஆன்மாவை சிறையிருப்பிலிருந்து விடுவித்தல் போன்ற சபை உண்டாக்கிய காரியத்தை விற்க முடியவில்லை.
Ø  மக்கள் சபையின் அதிகாரத்தைக் கேள்வி குறியிட்டு, அவர்களை ஏமாற்றுகிறவர்களாக திருடுகிறவர்களாக்க் காண்பார்கள் என்றெண்ணி.
Ø  கடவுளுடைய வார்த்தை சொல்வதும், ஆசாரியர்கள் சொல்வதும் அதில் உள்ள வேறுபாடுகளும் மக்களுடைய பார்வைக்கு வெளிப்படையாக இருக்கும், மற்றும் சத்தியம் மக்களைச் சபையின் கட்டுப்பாட்டிலும் பயத்திலும் இருந்து விடுவிக்கும் என்றெண்ணி.
Ø  இரட்சிப்பு விசுவாசத்தினால் உண்டாகும், கிரியையினாலோ காணிக்கைகளினாலோ இல்லை என்பதை புரிந்துக்கொள்வார்கள். ஆசிரியர்களின் தேவை விசுவாசிகள் மத்தியில் குறையும் என்றெண்ணி.
Ø  சபை திருமறைப்படுத்திய புனிதர்கள் மற்றும் மேரியை வணங்குதல், கேள்விக்குள்ளாகும் என்றெண்ணி.
Ø  வேதாகமம் ஆங்கிலத்தில் இருப்பது பொல்லாத சபைக்குப் பெரிய பாதிப்பை உண்டாக்கும். பெரிய பிரிவினைகள்உண்டாகும், இரண்டு குழுக்களுக்கும் பாதிப்பை உண்டாக்கும் என்றெண்ணி.

தள்ளுபடியாகமம்
தள்ளுபடியாகமம் என்பது வேதாகம திருமுறைப்படுத்துதலுக்கு ஒற்றுப்போகாத எழுதப்பட்ட காரியங்களாகும். தள்ளுபடியாகமம், வேதாகம புத்தகங்கள் அல்லது பகுதிகள் என்று அழைக்கப்படுவதற்கு ஏற்றவை அல்ல. தள்ளுபடியாகம புத்தகங்கள் அல்லது பகுதிகளாவன தோபித், ஜூடித், சாலோமோனின் ஞானம், ஜீசஸ் பென் சிரா (சிராக்), பாருக், ஜெரேமியின் கடிதம் (வல்கேட்டில் பாருக்கின் 6வது அதிகாரமாக உள்ளது), தானியேல் புத்தகத்தின் கூடுதல் பகுதிகள் (அசரியாஸ், சூசன்னா, பெல் மற்றும் டிராகனின் ஜெபம்), எஸ்தர் புத்தகத்தின் கூடுதல் பகுதிகள், 1 மக்காபீஸ், 2மக்காபீஸ், 3மக்காபீஸ், 1 எஸ்ட்ராஸ், முதலியன. தள்ளுபடியாகமம் கையெழுத்து பிரதிகள் கிறிஸ்தவ வேதாகமத்தோடு சேர்ந்தே நிலைத்திருக்கின்றன (உதரணத்திற்கு வாடிக்கானஸ் சுவடி, சினாய்டிகஸ் சுவடி, அலெக்ஸ்சான்றினஸ் சுவடி, வல்கேட், மற்றும் பேஷிட்டா). லூதர் (1534) மற்றும் ட்ரென்ட் (8 ஏப்ரல் 1546) இயற்றிய லூதரன் மற்றும் கத்தோலிக்க திருமுறைப்படுத்தலுக்கு பின்பு, ஆரம்ப கால கிறிஸ்தவ புரட்சி மொழிப்பெயர்ப்புகளில்  (விசேஷமாக ஜெர்மனில் லூதருடைய வேதாகமம் மற்றும் 1611 இல் ஆங்கிலத்தில் ஜேம்ஸ் ராஜா பதிப்பு ) தள்ளுபடியாகமத்தை ஒற்றிவைக்கவில்லை, ஆனால் அதை தனியாகத் தள்ளுபடியாகம பகுதியாக, பழைய மற்றும் புதிய ஏற்பாட்டிலிருந்து பிரித்து அமைத்திருந்தனர். மற்ற ஆதி கால நூல்களோடு, தள்ளுபடியாகமம் சில காரியங்களை பற்றி ஆராயத் தெரிந்துக்கொள்ள எப்பொழுதும் உதவுகிறது.

அச்சில் வேதாகமம்:
குட்டென்பெர்க் முதலில் லத்தீன் வேதாகமத்தை 1456 இல் அச்சடித்தார், அதற்கு முன்பு அனைத்து வேதாகமங்களும் கையால் பாப்பிரஸிளும், தோல்சுருள்களிலும், காகிதத்திலும் எழுதினர். அதன் பிறகு வேதாகமம் வேகமாகப் பெரிய அளவில் பரவியது.
1514 கி.பி. – எராஸ்மஸ் முதன் முதலில் கிரேக்க புதிய ஏற்பாட்டை அச்சடித்தார். அந்தக் கிரேக்க புதிய ஏற்பாட்டை அவர் ஐந்து புதிய ஏற்பாடு கையெழுத்து பிரதிகளைக் கொண்டு உருவாக்கினார், அதுவே டெக்டஸ் ரிசப்டஸ் அல்லது பெறப்பட்ட எழுத்துகள் என்றழைக்கப்பட்டது. எராஸ்மஸ்ஸின் புதிய ஏற்பாடு, லத்தீன் மொழி வேதாகமம் எவ்வளவு குறையுள்ளதாயும், சரியில்லாததாயும் ஆனது என்பதை உணர்த்தியது, நேர்த்தியானதாக இருப்பதற்கு மூல கிரேக்க மொழி பிரதிகள் (புதிய ஏற்பாடு) மற்றும் எபிரேய பிரதிகள் (பழைய ஏற்பாடு) உபயோகிப்பதின் அவசியத்தை உணர்த்தியது.
1522 கி.பி. – பன்மொழி வேதாகமம் வெளியிடப்பட்டது. பழைய ஏற்பாடு எபிரேயு, அரமைக், கிரேக் மற்றும் லத்தீன் மொழிகளிலும், புதிய ஏற்பாடு லத்தீன் மற்றும் கிரேக்க மொழிகளிலும் உள்ளன. எராஸ்மஸ் இந்தப் பன்மொழி வேதாகமத்தை கொண்டு தனது புதிய ஏற்பாட்டில் சில காரியங்களை மேம்படுத்தினார். டின்டேல் இந்தப் பன்மொழி வேதாகமத்தை பழைய ஏற்பாட்டை ஆங்கிலத்தில் மொழிப்பெயர்க்க உபயோகித்தார், ஆனால் அதை அவரால் முடிக்க முடியவில்லை, 1534 இல் அவர் கொல்லப்பட்டார்.
1560 யில் வெளிவந்த ஜெனீவா வேதாகமம் அதிகாரங்கள் மற்றும் வசனங்களுக்கு எண்களை முதலில் கொண்டதாகும், அதனால் குறிப்பிட்ட ஒரு பகுதியைப் பார்ப்பது எளிதானது. அது குறிப்பிட்ட காலத்தில் ஜேம்ஸ் ராஜா பதிப்பை விடப் பிரபலமாக இருந்தது.
1611 கி.பி. - ஜேம்ஸ் ராஜா பதிப்பு  மூல எபிரேயு கிரேக்கிலிருந்து உருவாகி அச்சடிக்கப்பட்டது. ஜேம்ஸ் ராஜா பதிப்பை மொழிப்பெயர்த்தவர்கள் டெக்டஸ் ரிசப்டஸ் ஐ அடிப்படையாகக் கொண்டு மொழிப்பெயர்த்தனர். சில அரசியல் காரணங்களுக்காக ராஜா அந்த மொழிப்பெயர்ப்பிற்கு பெரிதும் உதவினார், எனினும் கடவுள் அதையும் நல்லதொரு காரியத்திற்கு பயன்படுத்தினார்.  

ஆங்கில மொழிப்பெயர்ப்புகள்:
முதலாவது ஆங்கில வேதாகம கையெழுத்து பிரதிகள் 1380 இல் ஆக்ஸ்போர்ட் பேராசிரியரும், அறிஞரும் இறையியல் நிபுணருமான ஜான் விக்கிளிப்பியால் உண்டாக்கப்பட்டது. அது அன்று விக்கிளிப்பிக்கு கிடைக்கப்பெற்ற ஒரே மூலமான லத்தீன் வல்கேட்டிலிருந்து மொழிப்பெயர்க்கப்பட்டது.
சீர்திருத்தவாதிகளின் படைக்குத் தலைவராகவும், ஒரு சிறந்த ஆவிக்குரிய தலைவராகவும் இருந்தவர் வில்லியம் டின்டேல். 1526 கி.பி. யில் புதிய ஏற்பாட்டை ஆங்கிலத்தில் முதன் முதலில் அச்சடித்தவர் என்ற பெருமை இவருக்கே உரியது. டின்டேல் ஒரு அறிஞர், பேரறிவாளர், அவர் எட்டு மொழிகளில் சிறந்து விளங்கினார், அதைக் கேட்போருக்கு எது அவர் தாய் மொழி என்பதே தெரியாதாம். 
1540 இல் ஜெனீவா வேதாகமம் வெளியிடப்பட்டது, மற்றும் ஜேம்ஸ் ராஜா பதிப்பு 1611 இல் வெளியிடப்பட்டது, அதன் முன்பிருந்த பிரதிகளும் சீர்த்திருத்தப்பட்டன, மொழியின் முன்னேற்றத்திற்கு ஏற்பப் புதிய மாறுப்பட்ட பெயர்ப்புகளும் உண்டாயின, புதிய கையெழுத்து பிரதிகளும் கண்டுப்பிடிக்கப்பட்டன. பிறகு நூற்றாண்டுகளாக வெவ்வேறு பகுதிகளில் வாழும் மக்களின் வெவ்வேறு பேச்சு வழக்குகளுக்கு ஏற்றார் போல நிறைய மொழிப்பெய்யர்ப்புகளின் பிரதிகள் உண்டாயின.
1968 கி.பி. – கிரேக்க புதிய ஏற்பாட்டின் ஒன்றுப்பட்ட வேதாகம சமுதாயத்தின் நான்காவது பதிப்பு 175 கி.பி. யில் இருந்துள்ள பழைய கிரேக்கா கையெழுத்து பிரதிகளை உபயோகித்துள்ளது. இந்தக் கிரேக்க புதிய ஏற்பாட்டிலிருந்து  பு.அ.நி.ப மற்றும் பு.ச.ப. ஆகிய பதிப்புகள் மொழிப்பெயர்க்கப்பட்டன.
1971 கி.பி. புதிய அமெரிக்கன் நிலையான பதிப்பு (பு.அ.நி.ப) வெளியிடப்பட்டது. அது ஜேம்ஸ் ராஜா பதிப்பின் காலத்தில் இல்லாத அந்தத் தேதியில் இருந்த நிறைய பழைய எபிரேய மற்றும் கிரேக்க கையெழுத்து பிரதிகளைக் கொண்டு மொழிப்பெயர்க்கப்பட்டது. பு.அ.நி.ப இன் வார்த்தைகளும் வாக்கியங்களிலும் கிரேக்கத்தின் வார்த்தைகளையும் வாக்கியங்களையும் சார்ந்திருக்கிறது. 
1983 கி. பி.- புதிய சர்வதேச பதிப்பு (பு.ச.ப.) வெளியிடப்பட்டது. இதுவும் நிறைய கையெழுத்துப் பிரதிகளை பயன்படுத்தியுள்ளது. அது சிந்தனையிலிருந்து சிந்தனையாக மொழிப்பெர்யர்க்கப்பட்டது, மற்றும் அது பு.அ.நி.ப யை விட எளிதாக வாசிக்கப்  பயன்படுத்தப்பட கூடியது.
2002 கி.பி. - ஆங்கிலம் தரநிலை பதிப்பு (ஆ.த.ப.) வெளியிடப்பட்டது. அது பு.அ.நி.ப விற்கும் பு.ச.ப விற்கும் இடையில் பாலமாக உள்ளது.

மொழிப்பெயர்ப்புகளும் விளக்கமறிதலும்:
வேதாகம விளக்கமறிதல் மற்றும் வேதாகம மொழிப்பெயர்ப்புகள் பற்றிப் பொதுவாக நிறைய தவறான புரிந்துக்கொள்ளுதல் உண்டு. வேதாகமம் பெரும்பாலும் அதின் மூல மொழிகளிலிருந்து மொழிப்பெயர்க்கப்பட்டது, ஆனால் அது மாற்றப்படவில்லை,  விளக்கமறிதலும் அதனுள் திணிக்கப்படவில்லை. ஏற்றுக்கொள்ளப்பட்ட இன்றைய வேதாகம வார்ர்தைகள் ஒருவரின் / ஒரு குழுவின் விளக்கமறிதளினால் உண்டான மொழிப்பெயர்ப்புகள் அல்ல, அவை மூல ஆதி கால கையெழுத்து பிரதிகளைக் கொண்டு மொழிப்பெயர்க்கப்பட்டது.
இன்றைய வேதாகம மொழிப்பெயர்ப்புகளுக்குள் இருக்கும் வித்தியாசம் எப்படியாக வார்த்தைகளையும் வாக்கியங்களையும் மொழிப்பெயர்த்தவர்கள் மூல மொழியிலிருந்து (எபிரேயு, அரமைக், கிரேக்கு) தாங்கள் மொழிப்பெயர்த்த மொழிக்கேற்ப உபயோகித்துள்ளார்கள் என்பதை பொறுத்துள்ளது. அது மற்ற மொழியிலிருந்து மொழிப்பெயர்க்கப்பட்ட புத்தகத்தைப் போன்றதே.
வேதாகமம் பிழையில்லாததும் புனிதமானதும் அருளப்பட்டதுமான தேவனுடைய வார்த்தை. ஆனால் நகல்களோ மொழிப்பெயர்ப்புகளோ நகல் எடுக்கும்பொழுது ஏற்படும் பிழைகளையும், பொருத்தமில்லாத வார்த்தைகளையும் கொண்டிருக்க கூடும். ‘பிழை மனிதனுக்குரியது’ என்று ஒரு பழமொழியும் உள்ளது.
தெளிவு தேவைப்படும் இடங்களில் ஒன்றிற்கு மேற்ப்பட்ட மொழிப்பெயர்ப்புகளை சேர்த்து பார்க்கும் பொழுது பிரச்சனைகளைத் தீர்க்க முடியும்.

எழுத்துகளின் வேறுபாடு:
‘எழுத்துகளின் விமர்சனம்’ என்ற கல்வி சார்ந்த துறை நமக்கு இன்று இருக்கும் வேதாகம மொழிப்பெயர்ப்புகள் ஒரு சில நகல் சார்ந்த பிழைகளைத் தவிர்த்து ஆரம்ப கால வேதாகம கைப்பிரதிகளுக்கு சமம் என்பதை சுட்டிக்காடுகிறது. அச்சடிக்கும் இயந்திரம் கண்டுபிடிக்கப்படாதபொழுது, வேதாகமம் பல நூற்றாண்டுகளாகக் கைகளினால் நகல் எடுக்கப்பட்டது என்பதை மறக்கக் கூடாது. இருப்பினும் எழுத்துகள் நல்ல முறையில் பராமரிக்கப்பட்டன.
புதிய ஏற்பாட்டில் உள்ள ஏறக்குறைய 20,000 வரிகளில், 40 வரிகளே கேள்விக்கு உட்பட்டு உள்ளன. அந்த 40 வரிகள் முழுமையான புதிய ஏற்பாட்டிற்கு ஒரு சதவீதத்திற்கும் மிகவும் குறைவானதாகும், அது எந்த விதத்திலும் அர்த்தத்தையும் புதிய ஏற்பாட்டின் கோட்பாடையும் பாதிக்கவில்லை.
ஹோமருடைய இல்லியாட், இரண்டாவது மிகவும் பாதுகாக்கப்பட்ட நூலில் 15,600 வரிகளில், 764 வரிகள் கேள்விக்கு உட்பட்டது. அது மொத்த பகுதியில் ஏறக்குறைய 5% ஆகும், எனினும் யாரும் அதன் நம்பகத்தன்மையை குறித்து கேள்விக் கேட்கவில்லை.
வெஸ்ட்காட் மற்றும் ஹார்ட் 1870 இல், டெக்ஸ்டஸ் ரிசெப்டஸ் அல்லது சினாய்டிகஸ் சுவடி மற்றும் வாடிகானஸ் சுவடியை மையமாகக் கொண்ட கிரேக்க புதிய ஏற்பாட்டை உபயோகித்த புதிய ஏற்பாடு எழுத்துகள் 98.3 சதவீதத்தை தாண்டிச் சரியானது எனக் கூறியுள்ளனர்.
Ø எழுத்துகளை விமர்சிப்பவர்கள் புதிய ஏற்பாடு இருக்கும் 5600 கிரேக்க புதிய ஏற்பாடு கையெழுத்து பிரதிகளையும், மூன்று சுவடிகளையும் வகைகளாக அல்லது குடும்பங்களாகப் பிரித்துள்ளனர். மொத்தம் நான்கு கையெழுத்து வடிவங்கள் உள்ளன.
Ø அலெக்ஸ்சான்றியன் எழுத்து வடிவம், 350 கி.பி.யிற்கு முன்புள்ள சினாய்டிகஸ் சுவடி மற்றும் வாடிகானஸ் சுவடியின் பெரும்பாலான பாப்பிரஸ்ஸில் உள்ளது.
Ø மேற்கின் எழுத்து வடிவம், அது கிரேக்க கையெழுத்து பிரதிகளிலும் மற்ற மொழியில் உள்ள மொழிப்பெயர்ப்புகளிலும், விசேஷமாக லத்தீனிலும் காணப்படுகின்றன.
Ø பைஜான்டைன் எழுத்து வடிவம், பெரும்பாலான பிற்காலத்திய கிரேக்க கையெழுத்து பிரதிகளில் காணப்படுகிறது. 5,600 கிரேக்க புதிய ஏற்பாடு கையெழுத்து பிரதிகளில் 90 சதவீதம் பைஜான்டைன் எழுத்து வடிவம். அது மற்ற எழுத்து வடிவங்களைவிட முழுமையானது நீளமானது, எனவே அதன் பிற்காலத்திய தோன்றுதலை நிச்சயிக்க முடியும். பைஜான்டைன் எழுத்து வடிவத்தில் நிறைய கையெழுத்து பிரதிகள் இருப்பதற்கு காரணம், பைஜான்டைன் ஆட்சி கிரேக்க மொழி பேசுவதாயும், இஸ்லாமிய துருக்கியர்கள் அவர்கள் தலைநகரம் கான்ஸ்டான்டினோபிளை 1453 இல் முற்றுகையிடும் வரை பாரம்பரிய கிறிஸ்தவத்தை கொண்டதாயும் இருந்ததாகும். கான்ஸ்டான்டினோபிள் இப்பொழுது இஸ்டாம்புல் என்றழைக்கப்படுகிறது, தலைநகரமாக இல்லாவிடினும் துருக்கியின் ஒரு பெரிய நகரமாக இருக்கிறது.
Ø சீசரியன் எழுத்து வடிவம், சிலரால் கேள்விகுட்பட்டாலும், பா 45 யிலும், ஒரு சில கையெழுத்து பிரதிகளிலும் காணப்படுகிறது. 

தமிழ் மொழிப்பெயர்ப்புகள்:
வேதாகமத்தை தமிழில் மொழிபெயர்த்தலுக்கான வரலாறு தானிஸ் குடியிருப்பாகிய தரங்கம்பாடியில் 1706 ம் ஆண்டு பர்த்தொலோமியு சீகன்பால்க் (ஜெர்மன் அருட்பணியாளர்) வருகையில் ஆரம்பித்தது. அவருக்கு மொழிகளில் வரம் இருந்தது, மற்றும் அவருடைய அயராத உழைப்பால், சீக்கிரமாகக் காரியங்கள் முன்னேறின. அவர் தமிழ் இடத்திற்கு வந்து ஐந்து ஆண்டுகளில் புதிய ஏற்பாட்டின் மொழிப்பெயர்ப்பு பணிகளை முடித்தார். அது 1714 ம் ஆண்டு வெளியிடப்பட்டது. மற்றும் அவர் 1719 ம் ஆண்டு இறக்கும்பொழுது பழைய ஏற்பாட்டில் ரூத்தின் புத்தகம்வரை மொழிப்பெயர்த்து முடித்திருந்தார். மற்ற மொழிப்பெயர்க்கப்படாத புத்தகங்கள் மற்றொரு ஜெர்மானிய அருட்பணியாளர் பெஞ்சமின் சூல்ட்ச் என்பவரால் மொழிப்பெயர்க்கப்பட்டு 1728 ம் ஆண்டு தரங்கம்பாடியில் வெளியிடப்பட்டது.
மற்றொரு ஜெர்மானியரான பிலிப் பேப்ரிகஸ் இருபத்து நான்கு வருடங்கள் வேதாகமத்தை மொழிப்பெயர்த்து 1777 ம் ஆண்டு வெளியிட்டார்.
சீகன்பால்க் உடன் சேர்ந்து வில்லியம் கேரி மற்றும் ஹென்றி மார்ட்டின் பிற்காலத்தில் நிறைய மொழிப்பெயர்ப்பு வேலைகளைச் செய்துள்ளனர். அது மொழிபெயர்ப்பைத் தாண்டி, ஒவ்வொரு அருட்பணியாளரின் அந்தப் பகுதி மொழிக்கு முக்கியத்தும் அளிக்கும் உறுதியையும் தீர்மானங்களையும் காண உதவிற்று. அது அந்தந்த பகுதில் வாழ்ந்தோர் தங்கள் மொழியைக் குறித்து பெருமைக்கொள்ள செய்தது.
சி. டி. ரீனியஸ் உடன் வேதாகம சமூதாயத்தில் இருந்தவர்கள் கூட வேதாகமத்தை தமிழில் மொழிப்பெயர்த்தனர்.
புதிய சாதாரண பயன்பாட்டு மொழியில் தமிழ் வேதாகமம் 1995 ம் ஆண்டு வெளியிடப்பட்டது. அதுவே இன்று பெரிய அளவில் பயன்பாட்டில் உள்ளது. அந்த வேதாகமமும் சில சீர்த்திருத்தங்கள் செய்யப்பட்டு சில காரியங்களை மேம்படுத்த முயற்சிகள் எடுக்கப்படுகின்றன.

வேதாகமத்தை குறித்த மேற்க்கோள்கள்:
“ வேதாகமத்தின் அட்டைகளுக்கு நடுவில் மனிதன் சந்திக்கின்ற அனைத்து பிரச்சினைகளுக்குமான தீர்வுகள் உள்ளது.” – ரொனால்ட் ரீகன்
“இந்த புத்தகத்தைத் தவிர்த்து சரியெது தவறெது என்பதை தெரிந்துக்கொள்ள முடியாது.” – ஆபிரகாம் லிங்கன்
“கிறிஸ்தவர்களாகிய நீங்கள் உங்கள் கைகளில் உலகத்தின் நாகரீகத்தை துண்டாக உடைக்ககூடியதும், உலகத்தை தலைகீழாகப் புரட்டிப்போடுவதும், யுத்தங்கள் நிறைந்த உலகில் சமாதானத்தை தருவதுமான ஒரு புத்தகத்தை வைத்துள்ளீர்கள், ஆனால் நீங்களோ அது ஒரு இலக்கியத்தைத் தவிர்த்து ஏதும் இல்லை என்பது போலக் கையாளுகிறீர்கள்”. – மகாத்மா காந்தி
“கடவுளும் வேதாகமமும் இல்லாமல் உலகத்தைச் சரியாக ஆள்வது கூடாதது”. – ஜார்ஜ் வாசிங்டன்
“நிச்சயமாக வேதாகமத்தில் மற்ற வரலாறுகளைக் காட்டிலும் நம்பத் தக்க காரியங்கள் உள்ளன”. – சர் ஐசக் நியூட்டன்
100 பேரில் ஒருவர் வேதாகமத்தை வாசிப்பார், மற்ற 99 பேரும் அவரை வாசிப்பர்”. – டி.எல். மூடி

தேவனுடைய வார்த்தையில் பற்றார்வம்:
 “வேதாகமத்தில் உள்ள புரியாத காரியங்கள் என்னைப் பாதிக்கவில்லை, ஆனால் புரிகின்ற காரியங்கள் நிச்சயம் பாதிக்கும்.” – மார்க் டிவைன்
“இந்த புத்தகத்திலிருந்து காரணதுவமிக்க அனைத்தையும் எடு, அதை நம்பிக்கையோடு சமநிலைப்படுத்து, நீ சந்தோஷமான மனிதனாக வாழ்வாய், இறப்பாய்.” – ஆபிரகாம் லிங்கன்
“நல்ல சபை என்பது வேதாகமத்தை மையமாகக் கொண்ட சபையாகும, பெரிய கூடுகையோ, சிரிக்க கூடிய வகையில் பேசும் போதகரோ, ஆவியானவரின் அனுபவங்கள் எனக் கூறப்படும் காரியங்களோ அல்ல.” – அலிஸ்டாயிர் பெக்
ஜியார்ஜ் முல்லர் தேவனுடைய வார்த்தையின் மேல் அதிக பற்றும் மரியாதையும் வைத்திருந்தார். அவர் வேதாகமத்தை தனது முழங்கால்களில் நின்றுக்கொண்டு படித்தார்.

முடிவுப் பகுதி:
 “எப்பொழுதும் எனக்கு அழகான, சிறந்த, நம்பக்கூடிய புத்தகம் ‘வேதாகமம்’. ஒரு இயந்திரத்திற்கு அதை உருவாக்கியவர் தரும் கையேட்டை போல, அது இறைவனிடமிருந்து எனக்குக் கிடைத்த ஒரு பெரிய, நிறைந்த கையேடு. மனிதனுடைய சிந்தை எப்பொழுதும் மாறும், கலங்கும், ஆனால் வேதாகமம் எப்பொழுதும் முடிசிகளை அவிழ்க்கும்.”

துணையாதாரங்கள்:
1.     When Critics Ask “By Norman Geisler and Thomas Howe