அன்பு ஒருபோதும் அழியாது !!!
பெறுவதும் பிடித்திருப்பதும் மட்டுமல்ல, உண்மையான அன்பு என்பது கொடுப்பதும்
அனுமதிப்பதும் ஆகும். நாம் யாரிடம் அன்பு காட்டுகிறோம்
என்பதை அடிப்படையாகக் கொண்டு ‘அன்பை’ வகைப்படுத்த பல்வேறு வழிகள் உள்ளன. ‘லவ்’ என்று உச்சரிக்கப்படும்
போது பெரும்பாலும் அது காதல் உணர்வெனக் கருதப்படுகிறது.
ஆனால் காதல் உணர்வு மிகவும் தற்காலிகமானது, அது மாத்திரம் உறவுகளைத் தொடரச் செய்வதில்லை,
அதேசமயம் அன்பு என்பது காதல் உணர்விற்கு
மேலானது, மற்றும் எல்லா வகையான அனைவருடனுமான உறவுகளையும்
நிலைநிறுத்த உதவுகிறது. காதல் உணர்வு என்பது மறுக்க முடியாததாக வாழ்க்கையின் ஒரு
சுவாரஸ்யமான பகுதியாகும், ஆனால் சரியான விதத்தில் சரியான நேரத்தில்
அதை மிகவும் கவனமாகக் கையாள வேண்டும். காதல் உணர்வைத் தாண்டிப்
பெற்றோர், உடன்பிறப்புகள், நண்பர்கள், அக்கம் பக்கத்தினர்,
கூடவே அந்நியர் இடையேயான உறவுகள்
உள்ளிட்ட அனைத்தையும் திறம்பட கையாள உண்மையான அன்பு உதவுகிறது.
அப்படியானால் அந்த ‘உண்மையான அன்பு’
என்பது என்ன?
உண்மையான அன்பு - பொறுமையாக
இருப்பது, கருணை காட்டுவது, மரியாதை அளிப்பது,
சுயநலமற்றது, கண்டனம் செய்யாதது, மன்னிப்பது, உண்மையாக இருப்பது, தீமை செய்யாத்து, உண்மையாக இருப்பது, பாதுகாப்பது, நம்புவது, நம்பிக்கைக்கு உரியவராக இருப்பது,
கெடாமல் பார்த்துக்கொள்வது மற்றும்
உண்மையான அன்பு ஒருபோதும் அழியாது !!!
நாம் மகிழ்ச்சியுடனும் சமாதானத்துடனும்
இருக்க உண்மையாக நேசிப்போம் உண்மையாக நேசிக்கப்படுவோம்.
No comments:
Post a Comment