மனநலம் & பேரதிர்ச்சியைப் பார்த்துக்கொள்ளுதல் (MENTAL HEALTH & TRAUMA CARE)
(நல்ல மன ஆரோக்கியத்தின் இன்றியமையாமையைப் புரிந்துகொள்ளுதல் மற்றும் பேரதிர்ச்சியைக் கையாளுதல் அல்லது பேரதிர்ச்சியினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு
உதவுதல்)
அறிமுகம்
பாதகமான சந்தர்ப்பங்கள் அல்லது வாழ்க்கை சூழ்நிலைகளிலிருந்து மன அழுத்தம் எழுகிறது.
மன அழுத்தம் என்பது நமது உடல் அல்லது மன சமநிலையை சீர்குலைக்கும் ஒரு
தூண்டுதலுக்கான எதிர்வினையாகும். மன அழுத்தம், மன நோய்
அல்லது பேரதிர்ச்சியினால் நமது உடல் மற்றும் மன சமநிலையில்
ஏற்றத்தாழ்வு இருந்தால், இது "போராடுதல், விலகிச்
செல்லுதல் அல்லது முடக்கம்" போன்ற பதில் வினைகளைத் தூண்டுகிறது.
எல்லா
மக்களும் மனநோயை அனுபவிக்க மாட்டார்கள், ஆனால்
ஒவ்வொருவரும் தங்கள் மன நலத்துடன் போராடும் சவாலைப் பெறுவார்கள்.
பேரதிர்ச்சியின்
மூன்று அம்சங்கள்
(E’s): ஒரு நிகழ்வு (event), தொடர் நிகழ்வுகள் அல்லது சூழ்நிலைகளின் தொகுப்பு, ஒரு
நபருக்கு உடல் ரீதியாகவோ அல்லது உணர்ச்சி ரீதியாகவோ தீங்கோ
உயிருக்கு அச்சுறுத்தலோ ஏற்படுத்தும் அனுபவத்தையும் (experience) நீடித்த பாதகமான விளைவுகளையும் (effects)
ஏற்படுத்தலாம்.
மன
ஆரோக்கியம் (MENTAL HEALTH)
மன
ஆரோக்கியம் என்பது மனநல நிலையாகும், இது
மக்கள் வாழ்க்கையின் அழுத்தங்களைச் சமாளிக்கவும், அவர்களின்
திறன்களை உணர்ந்து, நன்றாகக் கற்றுக் கொள்ளவும், நன்றாக வேலை செய்யவும், அவர்களின் சமூகத்திற்கு
பங்களிக்கவும் உதவுகிறது.
இது
ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வின் ஒரு ஒருங்கிணைந்த அங்கமாகும்,
இது முடிவுகளை எடுப்பதற்கும், உறவுகளை
உருவாக்குவதற்கும் மற்றும் நாம் வாழும் உலகத்தை வடிவமைப்பதற்கும் நமது தனிப்பட்ட
மற்றும் கூட்டு திறன்களை ஆதரிக்கிறது.
மனநலம்
என்பது மனிதனின் அடிப்படை உரிமை. தனிப்பட்ட, சமுதாய மற்றும் சமூக-பொருளாதார வளர்ச்சிக்கு இது முக்கியமானது.
பொதுவான
மனநல நோய்கள் (COMMON MENTAL HEALTH ILLNESSES)
மிகவும்
பொதுவான மனநல நோய்கள் சில பின்வருமாறு.
• கவலைக்
கோளாறுகள் (Anxiety disorders)- கட்டுப்படுத்த கடினமாகத்
தோன்றும் அதிகப்படியான கவலையால் தொந்தரவு.
• குழந்தைகளின்
நடத்தை மற்றும் உணர்ச்சிக் கோளாறுகள் (Behavioural and emotional disorders
in children) - வயதுக்கு மீறிய மிகவும் கடினமான மற்றும் சவாலான
நடத்தைகள்.
• இருமுனை
பாதிப்புக் கோளாறு (Bipolar affective disorder) - பித்து
(உற்சாகம்) மற்றும் மன சோர்வின் அத்தியாயங்களை அனுபவித்தல்.
• மன சோர்வு (Depression)- மனநிலைக் கோளாறு, மனநிலை மாற்றங்கள், ஆர்வம் மற்றும் இன்பம் இழப்பு மற்றும் ஆற்றல் குறைதல் ஆகியவற்றால்
வகைப்படுத்தப்படுகிறது.
• விலகல்
மற்றும் விலகல் கோளாறுகள் (Dissociation and dissociative disorders)- அவர்களின் எண்ணங்கள், உணர்வுகள், நினைவுகள் அல்லது அடையாள உணர்வு ஆகியவற்றிலிருந்து துண்டிக்கிறது.
• உண்ணும்
சீர்குலைவுகள் (Eating disorders)- உண்ணும் நடத்தைகள்
மற்றும் அதனுடன் தொடர்புடைய துன்பகரமான எண்ணங்கள் மற்றும் உணர்ச்சிகளில் கடுமையான
மற்றும் தொடர்ச்சியான இடையூறுகளால் வகைப்படுத்தப்படும் நடத்தை நிலைமைகள்.
• வெறித்தனமான
கட்டாயக் கோளாறு (Obsessive compulsive disorder)- மீண்டும்
மீண்டும் தூண்டப்படும் எண்ணங்கள், காட்சிகள் அல்லது செயல்கள் மற்றும் தேவையற்ற தூண்டுதல்கள்.
• சித்தப்பிரமை
(Paranoia)- மக்கள் 'தங்களைப் பெறுவதற்கு'
வெளியே காத்திருக்கிறார்கள் எனபது போன்ற
பகுத்தறிவற்ற மற்றும் நிலையான உணர்வு.
• பிந்தைய
மனஉளைச்சல் சீர்கேடு (Post-traumatic stress disorder)- இது
எந்த ஒரு பேரதிர்ச்சிகரமான நிகழ்வையும் அனுபவித்தவர்களுக்கு ஒரு பிரதிபலிப்பாக
உருவாகும் மனநல நிலையாகும்.
• மனநோய்
(Psychosis)- பிரமைகள், மாயத்தோற்றங்கள்
மற்றும் குழப்பமான சிந்தனையை அனுபவிக்கலாம்.
• மனச்சிதைவு
நோய் (Schizophrenia)- சிந்தனை மற்றும் உணர்ச்சிகளுக்கு
இடையூறுகள் மற்றும் யதார்த்தத்தின் சிதைந்த கருத்து ஆகியவற்றால்
வகைப்படுத்தப்படும் சிக்கலான மனநோய்.
மனநல
நோய்கள் மற்றும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தும் காரணிகள்
(FACTORS THAT CAUSE MENTAL HEALTH ILLNESSES & TRAUMA)
|
உள்ளார்ந்த
காரணிகள் (Internal
Factors) |
வெளிப்புற
காரணிகள்
(External Factors) |
|
•
குறைந்த சுயமரியாதை •
கண்ணியம் இல்லாமை •உடல் அல்லது உளவியல் பிரச்சனைகள். •
சுய-அடையாளம் இல்லாமை •
யதார்த்தமற்ற எதிர்பார்ப்புகள் •
வாழ்க்கையில் ஏதேனும் திடீர் மாற்றம். •
பொருத்தமற்ற அணுகுமுறைகள் மற்றும் உணர்வுகள். •
பயம் மற்றும் நிச்சயமற்ற தன்மை |
•
பாகுபாடுகளை எதிர்கொள்ளுதல். •
மோசமான மேலாண்மை திறன். •
போதை பொருட்கள் •
அச்சுறுத்தும் ஆடியோ காட்சிகள் •
அன்பான நபரிடமிருந்து பிரிதல். •
அதிக சுமை காரணமாகப் பள்ளி / கல்லூரி /
பணியிடத்தில் அழுத்தம். •
எடுக்கப்பட்ட பொறுப்புகளில் ஏற்றத்தாழ்வு. •
பாதுகாப்பற்ற சூழல்- உடல் மற்றும் உணர்ச்சி ரீதியான துஷ்பிரயோகம் |
மனநல
பாதிப்புகள் அல்லது பேரதிர்ச்சியின் அறிகுறிகள்/
தாக்கங்கள் (SYMPTOMS/ IMPACT OF MENTAL HEALTH lLLNESSES OR TRAUMA)
மனநல நோய்கள்
அல்லது பேரதிர்ச்சிக்கு பொதுவான
அறிகுறிகள் சில உள்ளன, அவை அதன் தாக்கமாகவும் கருதப்படலாம்.
|
உடல்
ரீதியான
(Physical) |
உணர்ச்சி
ரீதியான
(Emotional) |
|
• வலிகள்
மற்றும் மோசமான பசி • பாதுகாப்பிற்கான
அக்கறை • உடலுக்குக் கூடுதல் கவனிப்பு/ எந்த அக்கறை இல்லாமை •
உடமைகளுக்கு கூடுதல் கவனிப்பு/ அக்கறை இல்லாமை |
• தாழ்வான
சிந்தனை/ உயர்ந்த சிந்தனை • உறவுகளில்
சிக்கல் • பயம்
மற்றும் பதட்டம் • சங்கடம்/
வெட்கப்படுதல்
|
|
அறிவாற்றல்
ரீதியான
(Cognitive) |
நடத்தை
ரீதியான
(Behavioural) |
|
• அச்சுறுத்தும் கனவுகள் • நம்பிக்கை
இல்லாமை • இடம் பெறாதிருத்தல் •
குறைந்த செயல்திறன் •
பகுத்தறிவற்ற நம்பிக்கைகள் மற்றும் செயல்கள் |
• கட்டுபாடற்ற
கோபம் •திரும்பப்
பெறுதல் & தனிமைப்படுத்துதல் •எளிதாக ஏதாவது காரியத்திற்கு
அடிமையாதல் •குறிப்பிட்ட ஒன்றின் மீது அதிகப்படியான/ மிகக் குறைந்த கவனம் |
மன
அழுத்தம்/ கடினமான சூழ்நிலைகளின்
முறையற்ற கையாளுதல் (IMPROPER HANDLING OF STRESS/ DIFFICULT SITUATIONS)
பல
நேரங்களில் நாம் நண்பர்களிடமிருந்து உதவி மற்றும் வழிகாட்டுதலை நாடுகிறோம் அல்லது நாமாகவே எதையாவது பின்பற்றுகிறோம். அது எதுவாக இருந்தாலும், சவாலான சூழ்நிலைகளை நாம் கையாளும் விதத்தில் நிச்சயமாகப் பலனளிக்காத சில அம்சங்கள் உள்ளன. மன அழுத்தம் அல்லது கடினமான
சூழ்நிலைகளின் முறையற்ற கையாளுதல் பின்வருமாறு.
• சிக்கலைத்
தவிர்ப்பது.
• போதைப்பொருள்
அல்லது பிற சுய இன்பத்திற்கான
விஷயங்களை எடுத்துக்கொள்வது.
• எதுவும்
செய்யாமல்
சும்மா இருப்பது.
• தொடர்ந்து
கவலைப்படுதல்
நல்ல
மன ஆரோக்கியத்தைப் பெறுதல் / பராமரித்தல் மற்றும் பேரதிர்ச்சியைத் தவிர்த்தல்
(GAINING/ MAINTAINING GOOD MENTAL HEALTH AND AVOIDING TRAUMA)
பேரதிர்ச்சியைத்
தவிர்க்க உதவுவும் நல்ல மனநிலையைப்
பெற/பராமரிப்பதற்காகவும் நாம் பின்பற்றக்கூடிய சில செயல்கள்
பின்வருமாறு.
• சரியான
மதிப்பீடுகள் மற்றும் நம்பிக்கைகளுடன் சரியான பாதையில் இருத்தல்.
• சூழ்நிலையிலிருந்து
விலகி
இருத்தல்.
• நல்ல
மனிதர்களுடன் (தனிப்பட்ட ஆதாயத்தை எதிர்பார்க்காமல் இருப்பவர்கள்) மற்றும் உண்மையான தொழில் வல்லுநர்களுடன் நேரத்தைச்
செலவிடுதல்.
• யதார்த்தத்தை
ஏற்றுக்கொள்ளுதல், சுயத்தை அறிந்து கொள்ளுதல் மற்றும் மன அழுத்தச் சூழ்நிலைகளை மறுவடிவமைத்தல்.
• நேரத்தை
நன்றாக நிர்வகித்தல்.
• ஆரோக்கியமான
வாழ்க்கை முறையைப் பெற்றிருத்தல்.
• புதிய
விஷயங்களைக் கற்றுக்கொள்ளுதல்.
• மற்றவர்களுடன்
ஒப்பிடாமல், தன்னம்பிக்கையுடன் இருத்தல்,
நல்ல சுயமரியாதை மற்றும் கண்ணியம் கொண்டிருத்தல். (சிறந்திருத்தல் – நம்மால் முடிந்த சிறந்த முயற்சிகளை வழங்குதல்)
தொகுப்பு
மற்றவர்கள் நம்மைக்
குறித்து என்ன நினைக்கிறார்கள், என்ன
சொல்கிறார்கள், என்ன செய்கிறார்கள் என்பதைப்
பொருட்படுத்தாமல், நாம் யார் என்பதை உறுதிப்படுத்த
பின்வருவனவற்றை எப்போதும் நமக்குள் சொல்லிக்கொள்வோம்.
“இந்த உலகில் எந்தவொரு காரியத்தைப் பார்க்கிலும்,
நான் தனித்துவம், விசேஷம், மற்றும், மதிப்பு பொருந்தியள் (ன்)”
மேற்கோள்கள் (REFERENCES)
Guarino, K. &
Chagnon, E. (2018). Trauma-sensitive schools training package. Washington, DC:
National Center on Safe Supportive Learning Environments.
https://www.helpguide.org/articles/stress/stress-symptoms-causes-and-effects.htm,
Availability as of 22/2/2017
https://www.mentalhelp.net/articles/types-of-stressors-eustress-vs-distress/, Availability as of 22/2/2017
சுய
வளர்ச்சிக்கான கூடுதல் ஆதாரங்களுக்கு, பின்வரும் இணைப்பைப் பயன்படுத்தவும்- http://tinyurl.com/jtcselfdevelop
No comments:
Post a Comment