நோக்கமுள்ள வாழ்க்கை:
அறிமுகம்:
எல்லா மனிதரும் தம்முடைய வாழ்வின் நோக்கத்தை விவரிப்பது இவ்வுலகில்
மதிப்பீடுள்ள திருப்தியான வாழ்வை வாழ்வதற்கு அவசியமாகும். இளவரசரானாலும்
ஏழையானாலும் இவ்வுலகில் பிறந்த அனைவரும் இயற்கையின் முடிவைச் சந்தித்தாக வேண்டும்.
ஒரு நபர் கடவுளை நம்பவில்லை எனில்,
அந்த நபர் தம் வாழ்வின் நோக்கத்தை முடிவுள்ள நோக்கில்
மாத்திரம் அமைப்பர்,
நித்திய நோக்கில் அல்ல, தம்முடைய
உணர்வுகளையும் சிந்தனைகளையும் உடல் சார்ந்த காரியங்களையும் திருப்திப்படுத்த
எண்ணுவர், ஆனால் அதற்கு அளவீடு ஒன்றும் இல்லாததால், கடவுளைத்
தவிர்த்து அவர்கள் தோல்வி அடைவர். கடுவுள் மேலுள்ள ஒரு நபரின் நம்பிக்கை வாழ்வின்
நோக்கத்தை விவரிக்க முக்கிய பங்கு வகிக்கிறது. சரியான கடவுளை நம்புபவர் மாத்திரமே
சரியாய் வாழ்வின் நோக்கத்தை அமைக்க முடியும்.
கடவுள்- எல்லாவற்றிற்கும் மூலக்காரணர்
எல்லாவற்றும் பிதாவாகிய தேவனிடத்தில் இருந்துள்ளது மற்றும் நாம்
அவருக்காக உள்ளோம். எல்லாவற்றும் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து வழியாக உள்ளது மற்றும்
அவர் வழியாக நிலைத்திருக்கிறோம் (1கொரி 8: 6).
ஆதியிலே தேவன் அவருடைய வார்த்தையினால் வெறுமையிலிருந்து
வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார். கடவுள் ஒளி, இருட்டு, ஆகாயவிரிவு, நிலம், நீர்நிலை,
செடிகொடி, சூரியன், நிலா, நட்சத்திரம், பறவைகள், நீர் வாழ் உயிரினம், மிருகங்கள்,
மனுஷன்/ மனுஷி ஆகியவற்றை படைத்தார் (ஆதி 1: 1-27). கடவுள் எல்லாவற்றையும் ஒரு
நோக்கத்திற்காகப் படைத்தார், மற்றும் அவர் ஒரு நித்திய திட்டத்தை அதற்கு பின்னால்
வைத்திருந்தார்.
கடவுள் படைத்த அனைத்தும் நல்லது:
கடவுள் தாம் படைத்த அனைத்தையும் நல்லதெனக் கண்டார் (ஆதி 1: 1-30)
தேவன் படைத்ததெல்லாம் நல்லதாயிருக்கிறது; ஸ்தோத்திரத்தோடே
ஏற்றுக்கொள்ளப்படுமாகில் ஒன்றும் தள்ளப்படத்தக்கதல்ல. அது
தேவவசனத்தினாலும் ஜெபத்தினாலும் பரிசுத்தமாக்கப்படும் (1 தீமோத்
4: 4, 5).
மனிதன்- கடவுளின் விசேஷித்த படைப்பு
தேவன் தம்முடைய சாயலாக மனுஷனை சிருஷ்டித்தார், அவனைத் தேவசாயலாகவே சிருஷ்டித்தார் (ஆதி 1: 27).
தேவனாகிய கர்த்தர் மனுஷனைப் பூமியின் மண்ணினாலே உருவாக்கி, ஜீவசுவாசத்தை
அவன் நாசியிலே ஊதினார்,
மனுஷன் ஜீவாத்துமாவானான் (ஆதி 2: 7)
தேவனாகிய கர்த்தர் அனைத்து உயிரினங்களையும் மனிதனிடத்தில் கொண்டு
வந்தார், மனிதன் அதை எவ்வாறு அழைத்தானோ அதுவே அதற்குப் பெயராயிற்று. தேவனாகிய
கர்த்தர் பெண்ணை ஆணினுடைய விலா எலும்பிலிருந்து உண்டாக்கினார் (ஆதி 2: 18- 24).
பிரமாண்டமான உலகை பார்க்கும்பொழுது மனிதனை பற்றிக் கடுவுள்
நினைப்பதற்கு அவன் எம்மாத்திரம்,
எனினும் அவனைத் தேவதூதர்களைவிடச் சிறிதே
குறைவுள்ளவர்களாக உருவாக்கினார்,
அவர்களுக்கு மகிமையின் சிங்காசனத்தையும்
கனத்தையும் தந்து; அவரின் கைகளின் கிரியைகளுக்கான அரசாட்சியை தந்து; ஆடு, மாடு, மிருகங்கள், பறவைகள், கடல்
வாழ் உயினங்களை கீழ்படுத்தினார் (சங்கீதம் 8: 3-8).
மனிதனை குறித்து கடவுளின் நோக்கம்:
பின்பு தேவன் அவர்களை நோக்கி: நீங்கள் பலுகி பெருகி, பூமியை நிரப்பி, அதைக் கீழ்ப்படுத்தி, சமுத்திரத்தின்
மச்சங்களையும் ஆகாயத்து பறவைகளையும், பூமியின்மேல்
நடமாடுகிற சகல ஜீவஜந்துக்களையும் ஆண்டுக்கொள்ளுங்கள் என்று சொல்லி, தேவன் அவர்களை ஆசீர்வதித்தார் (ஆதி 1:
28).
தேவனாகிய கர்த்தர் மனுஷனை ஏதேன் தோட்டத்தில் அழைத்துக்கொண்டு வந்து,
அதைப் பண்படுத்தவும் காக்கவும் வைத்தார் (ஆதி
2: 15).
எல்லா மனுஷரும் இரட்சிக்கப்படவும், சத்தியத்தை
அறிகிற அறிவை அடையவும், தேவன் சித்தமுள்ளவராயிருக்கிறார் (1தீமோத் 2: 4). அதிக பயத்தோடும்
நடுக்கத்தோடும் உங்கள் இரட்சிப்பு நிறைவேறப் பிரயாசப்படுங்கள்.
ஏனெனில் தேவனே
தம்முடைய தயவுள்ள சித்தத்தின்படி விருப்பத்தையும் செய்கையையும் உங்களில்
உண்டாக்குகிறவராயிருக்கிறார் (பிலிப்பி 2: 12, 13).
உலகின் வழி விலகலும் சரிவும்:
மனுஷனுடைய இருதயத்தின் நினைவுகள் அவன் சிறுவயது தொடங்கி
பொல்லாததாயிருக்கிறது என்று கர்த்தர் தம் இருதயத்தில் சொன்னார் (ஆதி 8: 20, 21).
மனிதனுடைய விலகல் கடுவுளுடைய நன்மையான படைப்பைச் சரிவடைய செய்தது, கடுவுளுடைய
படைப்பின் சாராம்சம் இன்னும் மனிதனுள் மறைந்து உள்ளது, ஏனெனில்
கடவுள் மனிதனுடைய அனைத்து தேர்விற்கும் விளைவுகள் தந்துள்ளார்.
கடவுள் மனிதன் பின்பற்ற வேண்டிய முதல் கட்டளையாக அவன் சில
காரியங்களைச் செய்யலாம் எனவும் செய்யக் கூடாது எனவும் கூறினார் (ஆதி 2: 16, 17).
ஆனால் மனிதன் செய்யக் கூடாததை செய்தான், கீழ்ப்படியாமையின் விளைவாக அவனால் கடவுளைச்
சந்திக்க முடியவில்லை,
எனினும் கடவுள் அவனோடு இடைப்பட்டு அவனுடைய தவறை
கடிந்துரைத்தார் (ஆதி 3அதி).
பவுல் ரோமருக்கு இப்படியாக எழுதுகிறார், “யாரெல்லாம்
தீமையான காரியங்களைப் பின்பற்றுகிறார்களோ அவர்கள் மரணத்திற்கு உரியவர்கள் என்ற
கடவுளுடைய நீதியுள்ள நியமங்களை மக்கள் அறிந்திருக்கின்றனர். அவர்கள் அதைச் செய்வது
மாத்திரம் இல்லாமல்,
அதற்கு அனுமதியும் அளிக்கிறார்கள்” (ரோமர் 1:
18- 32).
மனிதனுடைய தேடலும் தோல்விகளும்:
“நிழலைப் போன்ற மாயையான தன் ஜீவகாலத்தைப் போக்கும் மனுஷனுக்கு இந்த
ஜீவனில் நன்மை இன்னதென்று அறிந்தவன் யார்? தனக்குப் பின்பு சூரியனுக்குக் கீழே சம்பவிக்குங்காரியம் இன்னதென்று
மனுஷனுக்கு அறிவிப்பவன் யார்?” (பிரசங்கி 6: 12)
மனிதன் பலவீனனை ஒடுக்குவதால் தன்னை பலவானாகக் காண்பிக்க எண்ணினான், மேலோகத்தை
அடைய முயற்சித்து உயர்ந்தவனாகக் காண்பிக்க எண்ணினான், தனக்கு
சொரூபங்களாலான கடுவுளை உண்டாக்கி தன்னை படைப்பாற்றல் உள்ளவனாகக் காண்பிக்க
எண்ணினான், செல்வத்தையும் பொருளையும் பெருக்கி பணக்காரனாகக் காண்பிக்க எண்ணினான், இயற்கைக்கு
மாறான/ நியாயபிரமானத்திற்கு விரோதமான ஆசைகளைக் கொண்டு திருப்தி அடைய எண்ணினான், ஆனால்
அவை அனைத்திலும் தோல்வியே மிஞ்சியது ஏனெனில் அதில் கடவுளுடைய மதிப்பீடுகள் இல்லை.
ஒரு நபர் தன் வாழ்வில் கடுவுள் இல்லாமல் நிறைய நன்மைகள் செய்தாலும் இறுதியில் அது
திருப்தியானதாகவும்,
அர்த்தமுள்ளதாகவும் இருக்காது.
நிறைய இன்பங்களையும்,
நிலைகளையும், வெளிப்பாடுகளையும் அடைந்த ஒரு ராஜா, “மாயை, மாயை, எல்லாம்
மாயை என்று பிரசங்கி சொல்லுகிறான்.சூரியனுக்குக் கீழே மனுஷன் படுகிற எல்லாப்
பிரயாசத்தினாலும் அவனுக்குப் பலன் என்ன?” எனக் கூறுகிறார் (பிரசங்கி 1: 2, 3).
கிறிஸ்து-
அனைத்திற்குமான வழிப்பாதை
தேவன்,
தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன்
எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய்
உலகத்தில் அன்புகூர்ந்தார் (யோவான் 3: 16).
மனிதனுடைய தேடுதலும் தோல்விகளும் அவனுடைய பாவத்தினாலும், கடவுள்
படைத்த பெரிய நோக்கத்திலிருந்து விலகியதாலும் நிகழ்ந்தது, அது
நம்பிக்கையின்மையையும் உண்டாக்கியது, வாழ்வை மதிப்பிழந்ததாக ஆக்கியது. ஆனால்
கிறிஸ்து பல காலங்களாக ஒரு விடுதலையின் நம்பிக்கையாகப் பிரசங்கிக்கப்பட்டுள்ளார், அவரே
கோணலான வழிகளை நேராக்கவும் கூடும்.
கிறிஸ்துவின் வார்த்தையை இருதயத்தில் வைத்துக்கொள்வதாலும், அவர் நடந்த
அதே வழியில் நடப்பதாலும் கடவுளுடைய அன்பு நம்மில் பூரணமாக்கப்படும்.
இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை நமக்குக் குற்ற உணர்வு இல்லாத
மதிப்புள்ள சிறப்பான வாழ்வை அளித்தது. மற்றும் எல்லா விசுவாசிகளும் தங்களுடைய
வாழ்வில் தங்கள் சகோதரருக்காக உயிரையும்
கொடுத்து, கிறிஸ்துவின் வாழ்வை பிரதிபலிக்க வேண்டும், அதுவே இவ்வுலகில் அவர்களின்
உயரிய நோக்கமாகும் (1 யோவான் 3: 16).
நம்முடைய வாழ்வை கர்த்தருக்குள் வடிவமைத்தல்:
அன்றியும், அவருடைய
தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களாய் தேவனிடத்தில் அன்புகூறுகிறவர்களுக்கு
சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று அறிந்திருக்கிறோம் (ரோமர் 8: 28)
இயேசு கிறிஸ்து அளித்த பெரிய கட்டளை “உன் தேவனாகிய கர்த்தரிடத்தில்
உன் முழு இருதயத்தோடும், உன் முழு ஆத்துமாவோடும் உன் முழு மனதோடும்
அன்புகூறுவாயாக; இது முதலாம் பிரதான கற்பனை. இதற்கு ஒப்பாயிருக்கிற இரண்டாம் கற்பனை
என்னவென்றால், உன்னிடத்தில் நீ அன்புகூறுவதுபோலப்
பிறனிடத்திலும் அன்புகூறுவாயாக என்பதே. இவ்விரண்டு கற்பனைகளிலும் நியாயப்பிரமாணம்
முழுமையும் தீர்க்கதரிசனங்களும் அடங்கியிருக்கிறது என்றார் (மத்தேயு
22: 36- 40).”
வாழ்வில் உள்ள சூழ்நிலைகளுக்குச் சிறந்த மதிப்பளவுகள், உருவாக்கியவராக
உள்ளவரிம் இருந்து கிடைக்கப்பட்ட தேவனுடைய வார்த்தையின் மூலமே தேடவும் பெறவும்
முடியும்.
ஒரு இயந்திரத்தின் செயலையும் நோக்கத்தையும் எவ்வாறு உருவாக்கியவரின்
விளக்கப் புஸ்தகம் சிறந்த வகையில் விவரிக்க முடியுமோ, அதே
போல் தேவனுடைய வார்த்தையாகிய வேதாகமம் மனிதர்களுக்கான நோக்கத்தை விவரிக்க
முடியும்.
நாம் ஏற்றுக்கொள்ளும் அல்லது ஏற்றுக்கொள்ளாத அனைத்திற்கும் விளைவுகளை
நாம் சந்திக்கிறோம்,
முதலில் அதைக் காண முடிகிறதான இந்த உலகில், பிறகு
வெளிப்பட போகிற வருங்காலத்தில்.
எல்லா செல்வங்களையும்,
இன்பங்களையும், வெளிப்பாடுகளையும் அனுபவித்த ஒரு மனிதன்
(சாலமோன் ராஜாவாகக் கருதப்படுபவர்),
“தேவனுக்குப் பயந்து, அவர்
கற்பனைகளைக் கைக்கொள்;
எல்லா மனுஷர்மேலும் விழுந்த கடமை இதுவே” எனக்
கூறுகிறார் (பிரசங்கி 12: 13).
பவுல் ரோமருக்கு இப்படியாக எழுதுகிறார், “கர்த்தர்
சமீபமாய் இருப்பதால் நாம் ஒன்றிற்கும் கவலைக்கொள்ளாமல், சந்தோஷமாய்
இருக்கலாம். எல்லா புரிந்துக்கொள்ளுதலுக்கும் மேலான தேவ சமாதானம் கிறிஸ்து
ஏசுவுக்குள் இருதயங்களையும் சிந்தையையும் காக்கும். நாம் சத்தியமுள்ள, கனத்திற்குரிய, நீதியுள்ள, சுத்தமுள்ள, நேசிக்கதக்க, சிறப்பு
தன்மையுள்ள, துதிக்க தகுதியுள்ள காரியங்களைச் சிந்தித்துக்கொண்டிருக்கலாம்”
(ரோமர் 4: 4-9).
சுயத்தின் மாற்றமும் உலகத்தின் தாக்கமும்
கோதுமை மணியானது நிலத்தில் விழுந்து சாகாவிட்டால் தனித்திருக்கும், செத்ததேயாகில் மிகுந்த பலனைக் கொடுக்கும். (யோவான் 12:
24).
ஒளியில் நடப்பது நாம் உண்மையுள்ளவர்களாக இருக்க, ஒருவரோடு
ஒருவர் ஐக்கியத்துடன் இருக்க மற்றும் பாவங்களிலிருந்து சுத்திகரிக்கப்பட உதவும்.
பாவங்களை அறிக்கையிடுவது அதிலிருந்து மன்னிப்பு பெற, எல்லா அநீதியிலிருந்தும் சுத்திகரிக்கப்பட
உதவும் (1 யோவான் 1:6-10)
ஒருவன் கிறிஸ்துவுக்குள்ளிருந்தால் புதுச்சிருஷ்டியாயிருக்கிறான்; பழையவைகள்
ஒழிந்துபோயின, எல்லாம் புதிதாயின (2கொரி 5: 17). ஒருவன் இயேசுவை பின்பற்றி வர
விரும்பினால், அவன் தன்னைத்தான் வெறுத்து, தன் சிலுவையை எடுத்துக்கொண்டு இயேசுவை
பின்பற்றக்கடவன் (மத்தேயு 16: 24).
கடவுளை நம்புகிறவர்கள் தங்கள் சரீரங்களைப் பரிசுத்தமும் தேவனுக்குப்
பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுக்க வேண்டும், இதுவே புத்தியுள்ள ஆராதனை. இந்தப்
பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரியாமல், தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமான
சித்தம் இன்னதென்று பகுத்தறியத்தக்கதாக, மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாக வேண்டும்
(ரோமர் 12: 1, 2).
கடுவுளுக்கு அடுத்ததாக, நம்மை நாம் மாத்திரமே அதிகமாய்
அறிந்திருக்கிறோம். நாம் கிறிஸ்துவை ரட்சகராக ஏற்றிருக்கிறோம், நாம்
சபைக்குப் போகலாம்,
ஐக்கியத்திலும் பங்குபெறலாம், எனினும்
நம் வாழ்க்கை வழி, நடக்கை,
செயல்கள் நம்முடைய சிநேகிதர் முன்னால்
மதிப்பீடு இல்லாமல் இருந்தால் அது எவ்வாறு உபயோகமாக இருக்கும். நாம் எவ்வாறு
மற்றவரைக் கவனிக்கின்றோமோ நோக்குகின்றோமோ, அதே போல எல்லோரும் நம்முடைய வாழ்வை நெருங்கிக்
கவனிக்கிறார்கள் என்பது மிகவும் உண்மை. நாம் எப்பொழுதும் சுவிசேஷத்தை வார்த்தையில்
பகிர வேண்டும் என்று அவசியமில்லை,
நம்முடைய செயல்கள் இன்னும் அதிகமாய் பேசும்.
ஒருவன் தன் சிநேகிதருக்காகத் தன் ஜீவனை கொடுக்கிற அன்பிலும் அதிகமான
அன்பு ஒருவரிடத்திலுமில்லை (யோவான் 15: 13)
நற்கிரியைகளை செய்கிறதற்கு நாம் கிறிஸ்து இயேசுவுக்குள்
சிருஷ்டிக்கப்பட்டு,
தேவனுடைய செய்கையாயிருக்கிறோம்; அவைகளில்
நாம் நடக்கும்படி அவர் முன்னதாக அவைகளை ஆயத்தம்பண்ணியிருக்கிறார் (எபேசியர் 2:
10).
விசுவாசிப்பவர்கள்- உலகத்திற்கு உப்பும் ஒளியும்:
இயேசு கிறிஸ்து விசுவாசிகளே சுவையளிக்கும் உப்பு எனவும் பாதை
காண்பிக்கும் ஒளி எனவும் கூறினார். விசுவாசிகளின் ஒளி மற்றவர் முன்பு பிரகாசிக்க
வேண்டும்,
அதன் மூலம், மனுஷர் விசுவாசிகளின் நற்கிரியைகளைக்கண்டு, பரலோகத்திலிருக்கிற பிதாவை மகிமைப்படுத்தும்படி, வெளிச்சம் அவர்கள் முன்பாகப் பிரகாசிக்கக்கடவது.
உலகில் உள்ள அனைத்து மக்களுக்கும் வாழ்வில் சரியான மதிப்பீடுகளும்
நெறிகளும் தேவை, அதற்கு முதலாவது சரியான கடவுள் தேவை. நம்முடைய வாழ்வை நாம்
ஆராயந்தோமென்றால், கடவுளுடைய இரக்கத்தினால் மாத்திரம் நாம் ரட்சிக்கப்படவில்லை, நிச்சயம்
அதில்தான் பெரிய பங்கு இருக்கிறது,
எனினும் நாம் நம்முடைய முழு இருதயதோடும்
மனதோடும் அவரை ஏற்றிருக்கிறோம். எனவே ஒரு மனிதன் அவனாக முன்வராதவரை அவனால் கடவுளை
ஏற்க செய்ய முடியாது,
ஆனால் நாம் நிச்சயமாக ஒரு ஒளியாகவும்
உப்பாகவும் இருந்து,
ரட்சிக்கபடுவத்தின் அவசியத்தையும், கடவளுக்குள்ளான
மாற்றமுள்ள வாழ்வின் அழகையும் அவர்கள் உணர உதவலாம்.
தொகுப்பு:
கிறிஸ்துவின் வசனம் உங்களுக்குள்ளே சகல ஞானத்தோடும் பரிபூரணமாக
வாசமாயிருப்பதாக; சங்கீதங்களினாலும் கீர்த்தனைகளினாலும்
ஞானப்பாட்டுகளினாலும் ஒருவருக்கொருவர் போதித்து புத்திசொல்லிக்கொண்டு, உங்கள் இருதயத்திலே கர்த்தரை பக்தியுடன் பாடி;வார்த்தையினாலாவது கிரியையினாலாவது, நீங்கள் எதைச் செய்தாலும், அதையெல்லாம்
கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலே செய்து, அவர்
முன்னிலையாகப் பிதாவாகிய தேவனை ஸ்தோத்திரியுங்கள் (கொலோ 3: 16, 17).
கடவுள் மாத்திரமே வெறுமையிலிருந்து காரியங்களை உருவாக்கியவர் மற்றும்
அவரே அனைத்திற்கும் மூலக்காரணர். கடவுள் படைத்த அனைத்தும் நல்லதாக இருக்கிறது, மற்றும்
மனிதன் கடவுளுடைய சாயலில் படைக்கப்பட்டதால் விசேஷ படைப்பாக உள்ளான். கடவுள் மனிதன்
அனைத்தையும் ஆளுகைக்க வேண்டும் என்ற உயரிய நோக்கம் வைத்திருந்தார், ஆனால் அவனுடைய
கீழ்படியாமை கடவுளோடு கூட உள்ள உறவில் பெரிய பிளவை ஏற்படுத்தியது. கடவுள் அந்தத்
தவறை மன்னித்து மறைத்தாலும்,
மனிதனுடைய தீவினைகள் பெரிய அளவில் அவனைக்
குற்றப்படுத்தின. மனிதன் சந்தோஷத்தை நிறைய வழிகளில் தேடினான் ஆனால் அவனால் நிரந்தர
தீர்வைக் கண்டறிய முடியவில்லை. கிறிஸ்து மனிதர்களுக்காக இவ்வுலகில் வந்து, ஒரு
முன் உதரணமாக வாழ்ந்து,
அவர்கள் குற்ற உணர்வைப் போக்க அனைவரின்
பாவங்களுக்காகப் பலி ஆனார். கடுவுளை அறிந்த நாம் கடவுளுக்காக வாழ்ந்து, நம்மை
நாமே வார்த்தையிலும் செயலிலும் புதுப்பித்து மற்றவர்களுக்கு முன் உதாரணமாக இருக்க
வேண்டும்.
சுய சிந்தனைகள்:
1. உலகத்தின் வழி விலகுதலிலும் தவறுதலிலும்
என்னுடைய பங்கு?
2. வாழ்வில் கடுவுள் இல்லாமல் சந்தோஷத்தைத் தேடிய
பொழுது நேரிட்ட தோல்விகளும் கற்றுக்கொண்ட பாடங்களும்?
3. என் வாழ்வை நான் கடவுளுக்குள்ளாக வடிவமைத்ததும்
மெருக்கேற்றியதும்?
4. சுயத்தை மாற்றிக்கொள்வதிலும் உலகத்தில்
தாக்கத்தை ஏற்படுத்துதலிலும் என் முயற்சிகள்?
5. இவ்வுலகில் என்னுடைய வாழ்வு முழுதும் என் வாழ்வின்
நோக்கம்?
No comments:
Post a Comment